பக்கம்:சுரதா ஓர் ஒப்பாய்வு.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

జ్ఞ சுரதா ஓர் ஒப்பாய்வு 45 ஜான்சனும், நோபல் பரிசு பெற்ற புதுக்கவிஞர் எலியட்டும் கூறிய கருத்துக்கள் சிந்தனைக் குரியவை. சர் ஹெர்பர்ட் கிரியர்சன் மெய்விளக்கக் கவிதைகளைப் பற்றிக் கூறும்போது, "மெய்விளக்கக் கவிதை என்பதுதாந்தேயின் Divina Comedia போலவும் கெதேயின் Faust போலவும் ஒரு தத்துவக் கோட் பாட்டின் அடிப்படையில் தூண்டப்பட்டதாகவும், வாழ்க்கையென்னும் நாடகத்தில் மனிதனின் பங்கு என்ன என்பதை விளக்கக் கூடியதாகவும் அமையும்' என்று குறிப்பிடுகிறார். இந்தக் கருத்து அவ்வளவு பொருத்தமானதாகப் படவில்லை. கவிஞர் டன்னும் அவருக்குப் பின்வந்த மெய்விளக்கக் கவிஞர்களும் எந்த நிலையான தத்துவக் கோட்பாட்டையும் அடியொற்றிக் கவிதைகள் எழுதவில்லை. மேலும் கவிதை என்பதே பொதுவாக இயல்கடந்த கற்பனையும் தத்துவங்களும் அடங்கியது தானே? மரபிலக்கியங்களில் அதிக ஈடுபாடு கொண்ட வரான டாக்டர் ஜான்சன் மெய்விளக்கக் கவிஞர்கள் பற்றிக் கீழ்க் கண்டவாறு குறிப்பிடுகிறார். 'பதினேழாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தோன்றிய ஒருவகைக் கவிஞர் கூட்டத்தார் மெய் விளக்கக் கவிஞர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். இவர்கள் மிகுந்த படிப்பாளிகள். தங்கள் கல்விச்