பக்கம்:சுரதா ஓர் ஒப்பாய்வு.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* 48 கவிஞர் முருகு சுந்தரம் fبذلك என்று திருமதி பென்னட் என்னும் திறனாய்வாளர் குறிப்பிடுகின்றார். ஆங்கில அறிஞர் டாக்டர் ஜான்சன் மெய் விளக்கக் கவிதைகள் பற்றிக் கூறிய கருத்துக்கள் எல்லாவற்றையும் அப்படியே ஏற்றுக் கொள்ள முடியாது. ஆங்கில இலக்கிய மரபில் ஆழ்ந்த பற்றும் ஈடுபாடும் கொண்ட அவர், மரபை மீறுவதைக் குற்றமாகக் கருதும் இயல்புடையவர். எனவே அவர் கூற்றில் ஒருதலைப்பட்சமான கருத்துக்களும் உண்டு. என்றாலும் மெய்விளக்கக் கவிதை பற்றி அன்று அவர் என்ன நினைத்தார் என்ற விளக்கமாக இக் கருத்துக்களைக் கொள்ளலாம். இருபதாம் நூற்றாண்டுப் புதுக் கவிஞரான டி.எஸ். எலியட் மெய்விளக்கக் கவிதை பற்றி மிகவும் உயர்வாகக் குறிப்பிடுகிறார். மெய்விளக்கக் கவிதைகளே தற்காலப் புதுக் கவிதைகளின் மூலம்’ என்பது அவர் கருத்து. மேலும், “எண்ணங்கள் தாமே நேரடியான சுவையுணர்வுகளாக உருவெடுப்பதை மெய்விளக்கக் கவிதையில் காணலாம்' " என்று குறிப்பிடுகிறார். மெய் விளக்கக் கவிதை தனக்கு முற்பட்ட இடைக்காலச் சீர்திருத்தக் கவிதைகளிலிருந்து மாறுபட்டதற்குப் பல காரணங்கள் உண்டு.