பக்கம்:சுரதா ஓர் ஒப்பாய்வு.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49 சுரதா ஒர் ஒப்பாய்வு قواني 1. 16ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட கருத்துப் புரட்சியும் சமயப்புரட்சியும். 2. கோபர்நிகஸின் புரட்சிகரமான கண்டு பிடிப்புகள். 3. கெப்ளர், கலீலியோ ஆகியோரின் வானியல் ஆய்வுகளும் கண்டுபிடிப்புகளும். 4. உலகை வலம் வந்த மாலுமிகள் வெளிப் படுத்திய புதிய செய்திகள். 5. கருத்துப் புரட்சியின் காரணமாகத் தோன்றிய உளவியல், தர்க்கவியல் கலைகள். 6. தந்தக் கோபுரத்தின் மேல் கைக்கெட்டாத உயரத்தில் உட்கார்ந்திருந்த கவிதையை நடுத் தெருவுக்குக் கொண்டுவரும் முயற்சி. மேலே குறிப்பிட்ட காரணங்களால் மெய் விளக்கக் கவிதை எல்லாருக்கும் புரியும் வகையில் அன்றாடப் பேச்சு மொழிக்கு மாற்றப்பட்டது. கவிஞர்கள் தமது உணர்வுகளை அனுபவத் தோடு கலந்து உள்ளத்தை நெகிழ்விக்கும் விரிவான படிமங்களை வெவ்வேறு பாவங்களில் வெளிப் படுத்தினர். புலமை நுட்பம், கற்பனை நயம், அணிகள் செறிந்த யாப்பு, மெய்ம்மை, நாடகப் பாங்கு, புதிய மொழிநடை, அறிவியல் தத்துவ சு - 4