பக்கம்:சுரதா ஓர் ஒப்பாய்வு.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 கவிஞர் முருகு சுந்தரம் فقة விளக்கங்கள் யாவும் இடம் பெற்றுப் புதுப்பொலி வோடு இக்கவிதை விளங்கியது. மெய்விளக்கக் கவிதையில் காணப்படும் மேதைமை, கருத்து வெளிப்பாடு, இருண்மை, புதுமைப் போக்கு, கலைநுட்பம், தொகுத்தளிப்பு, அறிவு சார்ந்த ஆய்வு முறை, மரபு மீறல், உளவியல் மெய்ம்மை, ஊடுருவும் நகைச்சுவை, எள்ளல், ஐயம், அவலம், துணிச்சலான கருத்துச் சுதந்திரம், கடுங்குரல், ஆற்றல் மிக்க படைப்பாற்றல், விட்டுக் கொடுக்காத காரணகாரியம், தொலைவுப் படிமம், தொலைவு உவமை யாவுமே புதுக் கவிதைக்குத் திறந்து விடப்பட்ட வாயில்கள். அளவுக்கு மீறிய மரபுச் செல்வத்தில் திளைத்துச் சோம்பலாக உறங்கிக் கொண்டிருந்த பண்டைக் கவிதைக்கு விழிப்புணர்ச்சியூட்டித் தட்டி எழுப்பிய புதிய பூபாளம் மெய்விளக்கக் கவிதை உத்தி. இது கருத்தையும் கலையையும் கலந்து இணைத்த புதிய உத்தி. அனுபவத்தையும் சிந்தனையையும் அளவோடு இணைத்த நேர்த்தியான கலவை. காதல், கடவுள என்னும் கரைகளுக்குள் ஓடிய கவிதை வெள்ளம்.