பக்கம்:சுரதா ஓர் ஒப்பாய்வு.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 கவிஞர் முருகு சுந்தரம் شه 4. சுதந்தரமாகவும் காரண காரியத்தோடும் சிந்தித்த இவர்கள் பிறரைச் சாடும் அங்கதப் பாடல்களில் (Satire) மிகவும் வன்மையான சொற்களைக் கையாளத் தயங்கியதில்லை. இந்த மெய்விளக்கச் சட்டையைச் சுரதாவுக்கு மாட்டுவது எனது நோக்கமன்று. புதுமை காரணமாகச் சுரதாவின் பாட்டில், மாணவப் பருவத்திலிருந்தே எனக்கு ஓர் ஈடுபாடு இருந்தது. புதிது புதிதாக அவர் படைத்த உவமைகளும், அவரது புதிய கவிதைப் பாணியும் என்னை வியப்பில் ஆழ்த்தின. அவருடைய கவிதை உத்திகளைப் பின்பற்ற முயற்சி செய்தபோது மிகவும் உழைக்க வேண்டியிருந்தது. ஆழமாகச் சிந்திக்க வேண்டியிருந்தது. ஆங்கில இலக்கியக் கவிதைகள்பால் ஆர்வம் ஏற்பட்டு நான் அவற்றைப் படித்துக் கொண்டிருந்த காலத்தில், கவிஞர் அப்துல் ரகுமான் ஒருநாள் பேச்சு வாக்கில், இந்த மெய்விளக்கக் கவிஞர்களைப் பற்றிப் பாராட்டிக் கூறினார். ரிச்சர்ட் க்ராஷா என்ற மெய் விளக்கக் கவிஞர், மேரி மக்தலேனாவைப்பற்றி எழுதியுள்ள The Weeper என்னும் கவிதையிலிருந்து சில வியக்கத் தக்க வரிகளை எடுத்துச்சொன்னார். உடனே என் கவனம் ஆங்கில மெய்விளக்கக் கவிஞர்கள் பக்கம் திரும்பியது. அவற்றைப் படிக்கத் தொடங்கியதும் சட்டென்று சுரதா என் உள்ளத்தில் வந்து நின்றார்.