பக்கம்:சுரதா ஓர் ஒப்பாய்வு.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53 சுரதா ஒர் ஒப்பாய்வு في கவிதை உத்தியிலும், சிந்தனைப் போக்கிலும் சுரதாவுக்கும் மெய்விளக்கக் கவிஞர்களுக்கும் சில ஒற்றுமைகள் இருப்பதைப் படிக்கப் படிக்கப் புரிந்துகொண்டேன். மெய்விளக்கக் கவிதைகளில் எனக்கு ஈடுபாடு ஏற்பட்டதும் அக்கவிதைப் பண்புகளைப் பற்றியும் விரிவாக அறிந்துகொள்ளவேண்டும் என்னும்ஆர்வம் ஏற்பட்டது. மெய்விளக்கக்கவிதைபற்றிய திறனாய்வு நூல்களைப் படிக்கத் தொடங்கினேன். சுரதாவின் கவிதைப் பாணி தோன்றுவதற்குரிய காரணங்கள் பற்றியும், மாறுபட்ட அவர் கவிதை உத்திகள் பற்றியும் சிந்தித்தபோது, என் உள்ளத்தில் சில பொருத்தமான கருத்துகள் தோன்றின. சுரதாவின் கவிதைப் பண்புகள் பற்றி எழுது வதற்கு முன் இருபதாம் நூற்றாண்டில் அவருக்கு முற்பட்ட கவிதை இலக்கியப் பாரம்பரியம் எப்படி இருந்தது என்பதை ஆராய்வோம். பாரதி பாஞ்சாலிசபதம், குயில்பாட்டு போன்ற சிறு காப்பியங்களை எழுதினார், பாரதிதாசனும் அவரைப் பின்பற்றிச் சஞ்சீவி பர்வதத்தின் சாரல், புரட்சிக்கவி, பாண்டியன் பரிசு, எதிர்பாராத முத்தம், தமிழச்சியின் கத்தி போன்ற சிறுக்ாப்பியங்களை எழுதிக் குவித்தார். அவர்களைப் பின்பற்றி எழுதிய கவிஞர்களுக்கும் இக்காப்பிய வெறி பற்றிக் கொண்டது.