பக்கம்:சுரதா ஓர் ஒப்பாய்வு.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 கவிஞர் முருகு கந்தரம் شة தனித்தன்மையோடு புதுமையான சிறு காப்பியங்களைப் படைக்க முயற்சி செய்யாமல் பாரதி, பாரதிதாசன் காப்பியங்களை நகல் எடுக்கத் தொடங்கினர். அவற்றைப் படிக்கும்போது, பாரதி, பாரதிதாசன் படைப்புகளே நினைவுக்கு வந்தன. தலைப்பு மாற்றம் தவிர, உள்ளடக்கமும் உணர்ச்சி களும் ஒன்றாகவே இருந்தன. சிலகவிஞர்கள் பாரதி, பாரதிதாசன் பாத்திரப் படைப்புகளை அப்படியே எடுத்துத் தங்கள் காப்பியத்தில் பெயர் மாற்றிச் செருகிக் கொண்டனர். பெண்ணுரிமை, விதவைமணம், மடமை ஒழிப்பு ஆகிய கருத்துக்களை மையமாக வைத்துக் காலத்தின் தேவைக்கேற்பச் சீர்திருத்த நோக்கோடு, கதைக்கவிதை (Story Poem)களைத் தமிழில் முதலில் படைத்தவர் பாரதிதாசன். அவரைப் பின்பற்றி இளங் கவிஞர்கள் பலர் அதே கருத்துக்களை மையமாக வைத்து நிறையக் கதைக் கவிதைகளை எழுதத் தொடங்கினர். ஆனால் அவரை விட்டு விலகிச் சென்று கதைக் கவிதைத் துறையில் புதிய சாதனை களையாரும் செய்யவில்லை. பாரதிதாசன் இயற்கையைப் பற்றி எழுதிய அழகின் சிரிப்பு ஒரு வெற்றிப் படைப்பு. இளங்கவிஞர்கள் அதையும் விட்டுவைக்கவில்லை. அதன் மறு பதிப்பாகப் பல நூல்கள் தோன்றத்