பக்கம்:சுரதா ஓர் ஒப்பாய்வு.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 கவிஞர் முருகு சுந்தரம் شه இவர்கள் காதலையும் பக்தியையுமே தமது முக்கியமான கருப்பொருள்களாகக் கொண்டனர். கவிஞர்சுரதா, நாத்திகக் கவிஞரான பாரதிதாசன் வழியில் வந்தவர்.ஆகையால், பக்தித்துறையை அவர் தீண்டவில்லை; காதலையே தமது கருப்பொருளாகக் கொண்டார். காதலைப் பாடுவதில் சுரதாவுக்கு விருப்பமதிகம்; அதை நுட்பமாகப் பாடுவதில் சுரதாவுக்கு இணை சுரதாவேதான். காதலையும் பக்தியையும் தமது கவிதைக்குரிய கருப்பொருளாக மெய்விளக்கக் கவிஞர்கள் கொண் டாலும், அன்றாட அரசியல், சமூக நிலை, நடை முறை வாழ்க்கையில் தட்டுப்படும் சின்னஞ்சிறு நிகழ்ச்சிகள் ஆகியவற்றையும், சுவையான கவிதை களாக மாற்றினர். சுரதாவும் அவ்வாறு செய்தார். கல்விப் பரப்பு இங்கிலாந்து நாட்டில் வாழ்ந்த மெய்விளக்கக் கவிஞர்கள் பலதுறைக் கல்வியறிவு பெற்றவர்கள். அவர்கள்.தமது காலத்தில் மக்களிடத்தில் வரவேற்புப் பெற்றிருந்த சமயதத்துவம், வானவியல்,தர்க்கம், ரசவாதம் (Alchemy) வரலாறு ஆகிய பல கலைகளையும் பயின்று தமது அறிவை விசாலப்படுத்திக் கொண்டி ருந்தனர். இவ்வாறு தாம் கற்ற பல்கலை அறிவையும் தாம் படைக்கும் கவிதையில் காட்டிக்கொள்ள விரும்பினர்.