பக்கம்:சுரதா ஓர் ஒப்பாய்வு.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

57 சுரதா ஓர் ஒப்பாய்வு ية சுரதாவும் கண்டது கற்கும் பண்டிதர். அவர் பொழுது போக்கே திருவல்லிக்கேணிக் கடற்கரைச் சாலையில் பழைய நூல்கள் வாங்குவதுதான். மஸ்தான்சாகிபு பாடல் முதல், மார்கரட்தாட்சர்வரை, பதார்த்த குணசிந்தாமணி முதல் பல்லி சொல்லும் சகுணப் பலன் வரை எந்த நூல் கிடைத்தாலும் வாங்காமல் விடமாட்டார். வாங்கிப் படித்தும் விடுவார். பலதரப்பட்ட செய்திகளும், வெளியே விட்டால் போதுமென்று அவர் மூளையைக் குடைந்து கொண் டிருக்கும்; அடிக்கடி கவிதை எழுதும் போதெல்லாம் அவைகளுக்கு விடுதலை கிடைக்கும்; அவற்றின் அணிவகுப்பைக் கீழே காணலாம். வரலாறு பாலிலே குளித்திட்டாளாம் பனிமங்கை கிளியோ யாத்ரா -தேன்.மழை, பக். 44 தென்கோடித் திருடன்யான் ஆல யத்தில் திருடியுள்ளேன் திருமங்கை ஆழ்வார் போலே அன்றாடம் கன்னியரைக் கற்ப பழித்தே ஆனந்தம் கண்டேன் யான் கோபாட் போல், முன்கோபம் கொண்டவன்யான் பாண்டி நாட்டு முடிவேந்த னாம்தந்து மாறன் போல! -தேன் மழை, பக். 80