பக்கம்:சுரதா ஓர் ஒப்பாய்வு.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 கவிஞர் முருகு சுந்தரம் ایلین கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் இறப்புக்கு இரங்கிச்சுரதா பாடிய பாடல் அவருடைய தேன்மழையில் இடம் பெற்றுள்ளது. அதில் ஒரு விருத்தப்பா: பானையது வீழ்த்துடைந்தால் அப்பா னைக்குள் பரவிநின்ற பழங்காற்றவ் விடத்தை விட்டு வாணவெளி செல்வதில்லை; அதனைப் போன்று வைகுண்டம் எவர்மூச்சும் செல்வதில்லை. என்று பாடுகிறார். இதில் வைகுண்டம் எவர்மூச்சும் செல்வதில்லை என்னும் கருத்தை ஒத்துக் கொள் கிறோம். ஆனால் 'பானையுடைந்ததும், அதில் பரவி யிருந்த காற்று வானவெளியை அடைவதில்லை’ என்று சொல்லுகிறாரே, அது எப்படி? ஏன் காற்று வாணவெளியை அடையாது? பூமிக்குமேல் இருப்ப தெல்லாம் வானவெளிதானே! மேலும் காற்று வெப்பத்தால் லேசாகி வானவெளிக்குச் செல்வது இயல்பான நிகழ்ச்சிதானே பானைக்குள் பரவியிருந்த காற்றுக்குமட்டும் விதிவிலக்கு உண்டா? மீண்டும் குழம்புகிறோம். இவை எல்லாவற்றையும் விட விநோதமான ஒரு குழப்பத்தைக் கவிஞர் மங்கை மாசா என்ற பாடலில் மிகச் சுவையாகச் சித்திரிக்கிறார்.அப் பாடல், வெவ்வேறு பெயரில் பல பிறவிகளை எடுத்துள்ளது.