பக்கம்:சுரதா ஓர் ஒப்பாய்வு.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.67 கரதா ஒர் ஒப்பாய்வு 3 يلي கான் சாகிப் என்ற வீரன் தக்கோலம் என்னும் ஊரை வெற்றி கண்டு, கொக்கூரைக் குருகூரைச் சூறையாடி, எக்காளமிட்டபடிதன்வீரர்களோடு வந்து கொண்டி ருக்கிறான். அப்போது ஒரு நாட்டுப்புறப் பெண்ணொருத்தி புற்கட்டைத் தலையில் ஏந்திய வண்ணம் எதிரில் வருகிறாள். அவள் கட்டான மேனி யில், கான் சாகிபின் உள்ளம் ஒட்டிக் கொள்கிறது. அவள் சம்மதத்தைப் பெற்று அவளைக் குதிரையின் மீது ஏற்றி வைத்துக்கொண்டு புறப்படுகிறான் கான் சாகிப். செல்லும் வழியிலேயே கான் சாகிப்புக்குக் காதல் பசி அதிகமாகிவிட்டது. அவளை உடனே அனுபவித்துவிட வேண்டும் என்ற அவா அவனை உந்தித் தள்ளுகிறது. குதிரையை விட்டுக் கீழே குதித்தான் கான் சாகிப்; அவளையும் கீழே இறக்கினான். காதலர் ஒதுங்கஅவ்விடத்தில் அடர்ந்த காடோ, புதர்களோ எதுவுமில்லை. வெட்டவெளி1 கான் சாகிப் மூளையில் ஒரு நூதனமான யோசனை தோன்றியது. குதிரையின்சேனத்தில் ஒரு சிறிய வெடி மருந்துப் பை இருந்தது. அந்த வெடிமருந்தைக் கையாலே வாரி வாயாலே ஊதினான். வெடிமருந்து காற்றில் பரவி, அவ்விடம் இருட்டாகிவிட்டது. அந்த இருட்டில் அவளைப் புணர்த்தான் கான் சாகிப். எப்படி கற்பனை? பாட்டைப் படியுங்கள்.