பக்கம்:சுரதா ஓர் ஒப்பாய்வு.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 கவிஞர் முருகு சுந்தரம் شه பண்பாடே அற்றவன்நீ பழைய காலப் பாட்டாலே பிழைப்பவன் நீ ஒருகா லத்தில் திண்டாடிக் கொண்டிருந்த நீயோ, இன்று தென்றலிலே மிதக்கின்றாய்! என்று 'ஏகதேச எழுத்தில் விளாசுகிறார். சுரதாவிடம் 'சின்ன விஷயங்கள் எவ்வளவு அழகாகக் கவிதைஉருவம் பெறுகின்றன என்பதற்கு ஒர் எடுத்துக்காட்டு: சியன்னா தேனா வினா சீதேவி என்பேர். என்னை ஈயன்னா தேவி என்பாள் என்தோழி கமல வேனி. தேயன்னா மானா என்னும் தேமாவை விரும்பித் தின்பேன். பேயன்னானானா மீது (பேனா) பிரியாத பிரியம் உண்டு. என்கொண்டை கூடைக் கொண்டை! என்தொண்டை குயிலின் தொண்டை! பொன்வண்டு குழலில் மொய்க்கும்; பொய்த்தேமல் உடம்பில் மொய்க்கும்; என்கெண்டைக் கண்கள் இன்னும் யார்மீதும் மொய்த்த தில்லை! தின்பண்டச் செல்வாய் தன்னைச் சிவப்பேற விட்ட தில்லை.