பக்கம்:சுரதா ஓர் ஒப்பாய்வு.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ు சுரதா ஒர் ஒப்பாய்வு 73 6. சுரதாவின் படிமங்கள் ஒரு கவிதையைப் படிக்கும்போது, படிப்பவர் உள்ளத்தில் கவிஞன் புலப்படுத்தும் கற்பனைக் காட்சியே படிமம் (Image) எனப்படுகிறது. ஒரு கவிதையின் வெற்றிக்கு அதில் கையாளப்படும் படிமங்களே காரணம் என்று சொல்லலாம். இப்படிமங்கள் ஏற்கனவே கவிஞன் உள்ளத்தில் குவிந்திருக்கும் பழைய கருத்துக்களில் இருந்தும் தோன்றலாம்; அவனுடைய சொந்த அனுபவங் களிலிருந்தும் தோன்றலாம்; அவ்வப்போது வெளிப் படும் புதிய செய்திகளிலிருந்தும் தோன்றலாம். மரபுக் கவிஞர்கள் முன்னரே தாங்கள் படித்து ஊறிய புராண இதிகாசங்களிலிருந்தும், பண்டை இலக்கியங்களிலிருந்தும் படித்தறிந்த செய்திகளையே படிமங்களாக அடிக்கடி பயன்படுத்துவது வழக்கம். மெய் விளக்கக் கவிஞர்கள் எப்போதுமே மற்ற வர்கள் கையாளாத புதிய செய்திகளைக் கவிதையில் கையாளவேண்டும் என்பதிலே ஆர்வம் உள்ளவர்கள். எனவே அவர்கள் படிமங்களும் புதுமையாக இருக்கும்.