பக்கம்:சுரதா ஓர் ஒப்பாய்வு.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 கவிஞர் முருகு சுந்தரம் så சுரதா எழுதியுள்ள கதைக் கவிதைகளுள் 'விதவையும் வேதாந்தியும் குறிப்பிடத்தக்கது. விதவையான திருச்சி அரசி, வேதாந்தியானதாயுமான வரைக் காதலிக்கிறாள்; ஒரு தலைக் காதல் வேதாந்தி மறுக்கிறார்; அரசிக்கு அறிவுரையும் வழங்குகிறார். ஆனால் அரசியோதன் சாதுரியப் பேச்சால் அவரைச் சாய்க்க முயற்சி செய்கிறாள். அப்போது சுரதா கையாளும் படிமங்கள் அந்த இடத்துக்கு மிகவும் பொருத்தமாக அமைந்திருக்கின்றன. வெற்றிலை காய்ந்திருந்தால்கூட மக்கள் அதை நீரில் நனைத்துப் பதப்படுத்திப் பயன்படுத்துவர்; எறிந்துவிட மாட்டார்கள். தான் விதவையாக இருந்தாலும் பசுமை மாறாத தளிர் வெற்றிலை என்பதை அவள் தாயுமானவர்க்கு உணர்த்தும்போது சுரதா பயன்படுத்தும் வெற்றிலைப் படிமம் பொருத்தமாக இருக்கிறது. காய்ந்திருக்கும் வெற்றிலையைக்கூட, மக்கள் காவிரியின் நீர்தனைத்து உபயோ கிப்பர்; பாய்ந்தோடும் கலைமாணின் காது போன்ற பச்சைநிற வெற்றிலையா யிற்றே நான்தான்! வாய்சிவந்தே இருந்தாலும், தாம்பூ லத்தால் வாய்சிவக்கக் கூடாது என்ப தில்லை." மேலும், தானேவிரும்பி, வலிய வந்தணைக்கும் ஒரு பெண்ணின் இன்பம் கிடைத்தற்கரியது; மிகச் சுவையானது. அத்தகைய வாய்ப்பு எல்லாருக்கும்