பக்கம்:சுரதா ஓர் ஒப்பாய்வு.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

జ్ఞః சுரதா ஒர் ஒப்பாய்வு 77 கலைதேர்ந்த விலைமாதர் தொடுதோள் போன்று கற்போர்க்கெல் லாம்மிக்க எளிதாய், அந்த விலைமாதர் உள்ளம்போல், திட்ப துட்ப விளக்கமெலாம் அறிதற்கே அரிதாய்..." என்று பாடும் அழகு சுவைத்து மகிழ்தற்குரியது. பெரிய கருங்கல் ஒன்றைத் தூக்க முயன்று தோல்விகண்டவன், தன் இயலாமையைக் குறிப்பிட அதை முத்தமிட்டுச் செல்வது வழக்கம். உடன் கட்டை ஏறும் கொடிய பழக்கத்தைத் தம் ஆட்சிக்காலத்தில் தடுக்க முயன்று அக்பர் தோல்வி கண்டபோது, அத்தோல்வியைக் குறிப்பிடக் கவிஞர் இப்படிமத்தைப் பயன்படுத்துகிறார். கொடிதான இவ்வழக்கம் ஒழிய வேண்டிக் கோவேந்தர் அக்பரவர் முயன்ற போது 'தடைபோட முயலாதே மன்னா!" என்றே சத்தமிட்டார் வைதீக வெறியர்; தரக்க முடியாத மிகப்பெரிய பாராங் கல்லை முத்தமிட்டுப் பேசாமல் போதல் போலப் பிடிவாதக் காரரெல்லாம் எதிர்த்த தாலே பேரரசர் திட்டத்தை விட்டு விட்டார்.” நிலவில் ஈர்ப்புச் சக்தி குறைவு. பூமியில் நடப்பதுபோல் வேகமாகக் கால் ஊன்றி அதில் நடக்க முடியாது. கால்களை மெதுவாக எடுத்து வைத்து நடக்கும்போது, மிதப்பதுபோல் தெரியும். வான் வெளி வீரர் ஆம்ஸ்ட்ராங் தன் வான்வெளிக்