பக்கம்:சுரதா ஓர் ஒப்பாய்வு.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 கவிஞர் முருகு சுந்தரம் شه கூண்டிலிருந்து நிலவில் அடியெடுத்து வைக்கும் நிகழ்ச்சியைத் தொலைக்காட்சியில் கண்டுகளித்த சுரதா, அதை விளக்க நம் உள்ளத்தில் மிகப் பொருத்த மான ஒரு படிமக் காட்சியை உருவாக்குகிறார். செங்கல்லின் மீதினிலே மெதுவாய் ஏறும் சிலத்தியைப்போல் வானவெனி வீரர் ஆர்ம்ஸ்ட்ராங், திங்களன்று நிலவின்மேல் காலை ஊன்றிச் செயற்கரிய செயல்செய்தார்." காதலர்களின் உள்ளத்தில் விநோதமான ஆசைகள் ஏற்படுவது வழக்கம். அத்தகைய ஆசைகளை விளக்க இயற்கை மீறிய அதீதப் படிமக் காட்சிகளையும் சுரதா கையாள்கிறார். செங்கதிர்ச் சுடர்போல என்கரம் நீண்டிருந்தால் சிங்காரச் சிலையே உன்னை இங்கிருந்தே தொடுவேன்.' சில இடங்களில் சுரதா படிமங்களை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கிச் செல்லும் அழகு படிப்போரை வியக்க வைக்கும். பட்டாடை கட்டிக்கொண் டிருக்கும் வெள்ளைப் பால்நிலவோ! பளிச்சென்று மின்னும் மீனோ! கட்டிலுக்கே விட்டுவைத்த சிலையோ இல்லை கண்ணாடி மண்டிலமோ கரும்போ! பூவின்