பக்கம்:சுரதா ஓர் ஒப்பாய்வு.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

81 சுரதா লী ஒப்பாய்வு تکیہ: 7. உவமைக் கவிஞர் ஒரு பெண்ணுக்குச் சுருக்கமில்லாத ரவிக்கை பொருந்துவது போல, உவமைக்கவிஞர் என்ற பெயர் சுரதாவோடு ஒட்டிக் கொண்டிருக்கிறது. ஒரு பொருளோடு மற்றொரு பொருளை ஒப்பிட்டுக் கூறுவது உவமை. இதனை 'உள்ளுறை உவமம் என்றும் ஏனை உவமம்' என்றும் இரண்டு வகையாகப் பிரித்தனர் இலக்கண நூலார். இவற்றுள் ஏனை உவமம் பற்றியே இங்குப் பேசப்படுகிறது. அகமும் புறமும் பற்றிப் பாடிய பண்டைப் புலவர்கள் உவமைகளைக் கையாண்டனர். இந்த உவமை வினை, பயன், வடிவம், நிறம் என்ற நான்கில் ஏதேனும் ஒன்றையோ, பலவற்றையோ அடிப்படை யாகக் கொண்டு பிறக்கும். இவற்றை, வினைபயன் மெய்யுரு என்ற நான்கே வகைபெற வந்த உவமைத் தோற்றம்' எனவும் விரவியும் வருஉம் மரபின சு - 6