பக்கம்:சுரதா ஓர் ஒப்பாய்வு.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

త్రొ சுரதா ஒர் ஒப்பாய்வு 83 பொருத்தமான உவமைகளைக் கூற முடியும் என்றும் அத்திறமை எல்லாருக்கும் வாய்த்தல் அரிது என்றும் சுரதா ஓரிடத்தில் குறிப்பிடுகிறார். அப்பத்தைச் சுடும்போது பொத்தல் வந்தே அதன்தடுவில் தானாக அமைதல் போலே ஒப்பற்ற காவியத்தில் எங்கி ருந்தோ ஓடிவந்து கருத்துக்கள் குதிப்ப தில்லை ஒப்பிட்டுச் சொல்லுதற்குத் திறமை வேண்டும் உழைத்தார்க்கே அத்திறமை வந்து வாய்க்கும் உப்பற்ற உணவுக்கும் தாய்ப்பால் போன்ற உவமையில்லாப் பாடலுக்கும் பெருமையில்லை." பிறமொழிக்கவிஞரும் உவமைக்குக்கவிதையில் சிறப்பிடம் தந்து போற்றியிருக்கின்றனர். மெய் விளக்கக் கவிஞர்கள் தமக்குமுன் இருந்த கவிஞர்கள் கூறாத புதிய உவமைகளைத் தேடிப் பிடித்துக் கூறுவதில் அதிக ஆர்வம் காட்டினர். அதுவும் சிந்தனையைத் தொலைவில் ஒடவிட்டு மிகவும் நுட்பமான உவமைகளைக் கூறுதல் அவர்கள் இயல்பு. மேலை நாட்டுக் கவிதைத் திறனாய்வாளர்கள் இவ்வித உவமைகளைத் தொலைவு உவமைகள் என்றே பெயரிட்டு அழைத்தனர். ஆங்கில மெய்விளக்கக் கவிஞர்களின் பிதாமகன் என்று கருதப்படும் ஜான் டன் (John Donne)தொலைவு உவமைகள் கூறுவதில் ஆற்றல் மிக்கவன். அவன்