பக்கம்:சுரதா ஓர் ஒப்பாய்வு.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 கவிஞர் முருகு சுந்தரம் கம் தாய்நாட்டுப் பற்றுடைய தெலுங்கன், அந்தச் சகந்நாதக் கவியென்போன், தலைகீ ழான ஆய்தஎழுத் தைப்போன்று நிலப்ப ரப்பு அமைந்துள்ள தமிழ்நாட்டில் தங்க லானான்." அக்பரின் ஆசைமகள் லவங்கியின் நெற்றிக்கு உவமைக் கூறவந்த கவிஞர், வட்டமிட்ட வெண்ணிலவைப் பாதியாக மடித்ததுபோல் முற்றாத நெற்றி என்று குறிப்பிடுகிறார். நெற்றியைப் பிறைநிலவுக்கு எல்லாரும் ஒப்பிட்டுக் கூறுவர். ஆனால் சுரதா அப்படிச் சொல்ல விரும்பாமல் வட்ட நிலவை இரண்டாக மடித்துவிடுகிறார். தோகை விரித்த மயிலைப்பார்த்து வண்ணத் தோகையை வட்டமாய் விரித்தே ‘ஓ’ வெனும் எழுத்தை உண்டாக்கிக் காட்டினை!" என்று வியந்து பாராட்டுகிறார். இந்த உவமை வேறு யாரும் சிந்திக்காத புதுமை. பாண்டி நாட்டின் மீது படையெடுத்து வந்த மைசூர் மன்னன் அமைத்த பாசறைக் கூடாரத்தின் அமைப்பை விளக்கவந்த கவிஞர், இரும்புதந்த நெஞ்சுடையான், பாம்பின் பல்லில் இடம்பெற்ற நஞ்சுடையான் எருமை நாட்டான் கரும்புதந்த மாதர்கருங் குழல விழ்ந்து கவிழ்ந்தாற்போல் கூடாரம் அமைத்து விட்டான்