பக்கம்:சுரதா ஓர் ஒப்பாய்வு.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

93 சுரதா ஓர் ஒப்பாய்வு ثاني தொழிலாளி ஈரத் துணியை லாவகமாகக் கையிலெடுத்துப் பிழியும் அழகையும், அதை அவன் கரையில் வீசும் அழகையும் நேரில் பார்த்தால்தான் இந்த உவமையின் நுட்பம் புரியும். நடந்து செல்லும்போது கணவன் கம்பீரமாக முன்னே செல்வதும், அவனைத் தொடர்ந்து அடக்கமாக மனைவி வருவதும் இயல்பாக எங்கும் காணும் நிகழ்ச்சி. இதை, மதிமதுரப் புலவரெ லாம் புகழ்ந்து பாட வரலாற்றுப் பேரழகி ஆதி மந்தி எதுகைவரல் போலடுத்து வந்தாள்; அத்தி என்பானோ, மோனையைப் போல் முன்னே வந்தான்." மோனையைத் தொடர்ந்து வருவதுதானே எதுகை மூங்கிலில் எழும் இன்னிசைக்குக் குட்டி யானையின் கொட்டாவியையும், பழச்சாற்றில் கலந்து கொடுத்த நஞ்சைத் தோன்றா எழுவாய்க்கும் குறிப்பிட்டுச் சொன்ன உவமைகள் சுவைக்கத்தக்கன. இவை யாவும் வினை உவமைகள். ஈரோட்டுப் பெரியாரின் சட்டை போல இருண்ட கடல்..." என்பது நிறத்தின் அடிப்படையில் தோன்றும் உருஉவமை.