பக்கம்:சுரதா கவிதைகள் (கையடக்கப் பதிப்பு).pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 சுரதா கவிதைகள்

திராத வறுமைக்கு வித்தாம்! வாழ்வில்

சிக்கனந்தான் ஒருவனது சிறந்த சொத்தாம் & -நூல:துறைமுகம

உரைநடையின் சிக்கனந்தான் கவிதை, ஒங்கும்

உணர்ச்சிகளின் சிக்கனந்தான் அடக்கம்; காதல் வரவேற்பின் சிக்கனந்தான் பெண்ணின் நாணம்,

மாளிகையின் சிக்கனந்தான் குடிசை யாகும்.

- நூல்: துறைமுகம்

சேவிக்க வேண்டுமெனில் பக்தி வேண்டும்

சேமிக்க வேண்டுமெனில் புத்தி வேண்டும்

சேவிக்க பக்தியெனில் பொருளைப் போற்றிச்

சிறப்படைய சிக்கனந்தான் முதலில் வேண்டும்.

இல்லாமை

கல்லாமை ஒழிந்தாக வேண்டும். நல்ல

காவியங்கள் புதிதாகத் தோன்ற வேண்டும்.

எல்லார்க்கும் சமஉரிமை வேண்டும். நாட்டில்

இல்லாமை இல்லாமல் ஒழிய வேண்டும்.