பக்கம்:சுரதா கவிதைகள் (கையடக்கப் பதிப்பு).pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 சுரதா கவிதைகள்

நாளும் கிழமையும் ஞானிகட் கில்லை. நல்லவன் கெட்டவன் கல்லறைக் கில்லை.

கண்டேன்

விண்மீது மேகத்தின் பந்தல் கண்டேன்

வேற்றுமையில் லாஉலகைக் கனவில் கண்டேன் கண்களிலே, ஏற்றாத விளக்கு கண்டேன்

காதலிலே உடலனுக்கள் மகிழக் கண்டேன்.

- -இதழ்:போர்வான் (163-1957)

செந்தமிழில் பணிகண்டேன்; குளிர்ச்சி கண்டேன்: செவ்வுதய சூரியனைக் கொடியில் கண்டேன். அந்திதனில் ஒளிஇரவு ஒட்டக் கண்டேன்.

அருவிதனில் மங்கையின்மே லாடை கண்டேன். -இதழ்:போர்வான் (163-1957)

கற்பனையில் பெரும்புலமை வெறிவளரக் கண்டேன்; கண்களிலே கனவுகளின் தாய்வீட்டைக் கண்டேன். - - இதழ். சுரதா (1.3-1968)

சந்திரனில் நீங்காத அழுக்கு கண்டேன்.

சரசத்தில் இளம்பருவ மயக்கங் கண்டேன்.