பக்கம்:சுரதா கவிதைகள் (கையடக்கப் பதிப்பு).pdf/24

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

சுரதா கவிதைகள்

7



முகில்

அலைகளை அடுக்கி வைத்து
     அனுப்புதல் போல, வானில்
கலையாத நடைபி ரிக்கும்
     ஈரத்தின் பரப்பே!....

மழை

எண்ணெயில் குளித்த கூந்தல்
     இழையென நீண்டு பெய்யும்
வெண்மழை நீரே! விண்ணின்
     வியர்வையே வாழ்க!.


வீணையின் நரம்புபோல் வீழும் மழைநீர்
தாவரங் கட்கெல்லாம் தாய்ப்பா லாகும்!


மேகத்தின் சிரிப்பை மின்னலாம்! அந்த
மேசும் வழிக்கும் வியர்வையே மழையாம்!
புல்லுக்கும் பூண்டுக்கும் மழையே புணர்ச்சிநீர்!
எள்ளுக்கும் கொள்ளுக்கும் அதுவே வளர்ச்சிநீர்!