பக்கம்:சுரதா கவிதைகள் (கையடக்கப் பதிப்பு).pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுரதாகவிதைகள் 27

தாய்நாடே! உன்னை வேண்டித்
தவிட்டையும் தின்பேன்; இன்பத்
தாய்நாடே! உன்னை மீட்கத்
தனல்மீதும் நிற்பேன். அன்புத்
தாய்நாடே! மாற்றார் நஞ்சைத்
தரினும்யான் ஏற்பேன்; வீரத்
தாய்நாடே! உன்னைக் காக்கச்
சாகவும் அஞ்ச மாட்டேன்.

p. - இதழ் சுரதா (15-3-1968 குறிஞ்சியாய் முல்லை யாகிக்

குளிர்கடல் நெய்த லாகிச் சிறந்துள என்தாய் நாடே

செந்தமிழ் தென்றல் நாடே

- இதழ் சுரதா (15.3-1968)

சரித்திரம் ஒவ்வோர் நாட்டின்

தழும்பாகும்; நாட்டை வாட்டும் தரித்திரம் பொருளா தாரத்

தடுமாற்ற மாகும்.</poem>

- நூல் : தேன்.மழை