பக்கம்:சுரதா கவிதைகள் (கையடக்கப் பதிப்பு).pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சுரதா கவிதைகள்

47

படிப்பதும் கலைதான்: செய்யுள்
படைப்பதும் கலைதான். பூவைத்
தொடுப்பதும் கலைதான்; பெண்ணைத்
தொடுவதும் கலைதான்........


விற்பனை அதிக ரித்தால்
விளைபொருள் அதிகம் தோன்றும்
கற்பனை அதிக ரித்தால்
கலைபல் நாட்டில் தோன்றும்

நினைவில் அழகும்; அழகில் போதையும்
போதை ஏற்படின் புதுப்புது ஆசையும்
ஆசையால் உறவும் அதனால் கலப்பும்
உயிரின் பிரசவம் உற்பத்தி யாகும்.
கலப்பால், குடும்பக் கலையும் வளரும்.

--குடும்பக்கலை"ஆண்டுமலர்


மத்தளம் சத்தம் செய்ய,
மகரயாழ் ஏங்க, வண்ணச்
சித்திரா பதியாள் பெற்ற
தேன்மகள் அரங்கந் தன்னில்
தத்தித்தா தைதை என்றே
சதிராடி னாளே அந்த
முத்திரை நடன மெல்லாம்
முழுமுதற் கலைதா னன்றோ?