பக்கம்:சுரதா கவிதைகள் (கையடக்கப் பதிப்பு).pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுரதா கவிதைகள் 59 பெருமையில்லாப் பாட்டெழுது, ட்ெடேன் —

- . என்னைப். பின்பற்றி எழுதுதற்கோர் கூட்ட முண்டு. கருவடைந்த பெண்பெறுவாள் குழந்தை என்றன் கருவிதைகளும் என்புகழ்க்குத் தாயாய் நிற்கும்.

-நூல்: தேன்.மழை

இன்பம் என்பதும் நம்பிக்கை துன்பம் என்பதும் நம்பிக்கை ஆராய்ந்து பார்த்தால் பேரும்புகழும் ஆபத்தைக் குறிக்கும் எச்சரிக்கை

登 * 冷 வெள்ளத்தில் தோன்றியெழும் தண்ணீர் முட்டை

விரைவினிலே அழிந்துவிடும். ஆனால் மக்கள் உள்ளத்தில் குடியேறும் தலைவன் கீர்த்தி

ஒருநாளும் அழிவதில்லை...

- இதழ் : சுரதா (1.10.1969)

நெல் சேர்க்கும் வயலைப்போல்; குளிர்ச்சி

நிழல் சேர்க்கும் மரத்தைப்போல் வாயின் ஒரம் புல் சேர்க்கும் மாண்ப்போல் புதுமை சேர்த்துப் புகழ்சேர்க்கத் தெரிந்தோனே சிறந்தோன் ஆவான் -இதழ் சுரதா (15.5.1968)