பக்கம்:சுரதா கவிதைகள் (கையடக்கப் பதிப்பு).pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 சுரதா கவிதைகள்

கலையுணர் வில்லை என்றால்

காதலும் கசந்து போகும்.

குயிலுக்கு மாமரமே கோடை மேடை

கோபுரமே புறாக்கூட்டம் கொஞ்சும் மேடை

மயிலுக்கு மலைக்குறிஞ்சி நிலமே மேடை

மஞ்சந்தான் காதலரின் சிறந்த மேடை

வீரத்தில் ஒருவனுக்கே வெற்றி ! காதல் வித்தையிலே இருவருக்கும் வெற்றி!

முத்துக்கும் ஒளிவழங்கும் முத்தே! என்றன் மூச்சாக இருப்பவனே! முல்லைப் பூவே சத்தத்தில் புவிபிறந்த தென்பர் கட்டித் தங்கத்தில் நீபிறந்தாய் ! அதுவே உன்தாய்.

-இதழ் சுரதா(15.3-1968)

வீரத்தின் அடையாளம் படைக ளாகும்

விவேகத்தின் அடையாளம் கீர்த்தி யாகும்

ஈரத்தின் அடையாளம் தண்ணி ராகும்

இன்பத்தின் அடையாளம் காத லாகும்.

சர்க்கரையே! என்றழைத்தான். உடனே மங்கை சர்க்கரைக்குத் தமிழிற்சொல் இலையோ?

என்றாள்