பக்கம்:சுருளிமலை.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 மு. கருணாநிதி குழல் எழுப்புகின்ற இன்ப ஓசை ! அவள் அப்போது கலாபமா வாள்- அதைக் கண்டு தாய் கண்களைக் குளமாக்கிக் கொள்வாள் "என் தங்கத்தை அடையும் பாக்கியம் யாருக்குக் கிடைக் கிறதோ?' எனக் கேட்டுக் கொள்வாள். 1 அப்போது, உள்ளிருந்து பொன்னையாவின் "லொக் லொக்" என்ற இருமல் சப்தம் - அவன் படும் மரணாவஸ்தை -அவர்களை வீட்டுக்குள் ஓடச் செய்யும் !...... அந்த இருமலினூடே தந்தை, மகனைக் கண்டிக்கத் தொடங்குவான். இருமல் அதிகமாகும். தன்னால் தந்தைக்கு உயிர் வாதனை என நினைத்து சுருளிமலை வெளியேறுவான். அவனைத் தொடர்ந்து ஓடிக் கண்ணீருடன் திரும்புவாள் பொன்மணி! இந்த விசித்திரமான குடும்பத்தைப் பற்றித் தினந்தோறும் பலரிடம் திரும்பத் திரும்ப விமர்சனம் செய்யாவிட்டால் தூக்கமே வராது, தீச்சட்டி சிங்காரத்துக்கு ! ... பெயர் மட்டும் அல்ல; ஆளைப் பார்த்தாலே நெருப் பைப் பார்ப்பதுபோல்தான் இருக்கும். யாராயிருந்தாலும் எரிந்து விழுந்துதான் பேசுவான். எடுப்பான தோற்றமும் மிடுக்கான நடையும் கொண்ட அவனைக் கண்டு ஊரிலேயுள்ளவர்கள் சிறிது அச்சங் கொள்ளவே செய்வர். பேச்சு, தோற்றம், நடை உடை பாவனைகள் - இவைகளை யெல்லாம் கண்டு அவனை ஒரு துஷ்டன் என்று யாரும் தீர்மானித்து விடக்கூடாது. கள்ளமில்லாத உள்ளம்-என்ன பேசுகிறோம். ஏன் பேசுகிறோம், நாம் இப்படிப் பேசுவதால் யார் யாருக்கு மனசு புண்படும் என்பதைப்பற்றி யெல்லாம் கவலைப் படமாட்டான். நினைத்ததை நினைத்து முடிப் பதற்குள் வெளியே சொல்லிவிட வேண்டும். இல்லாவிட்டால் தலையிலும் இருதயத்திலும் ஏதோ பெரிய பாரம் அழுத்துவது போலிருக்கும் அவனுக்கு! காளி கோயிலில் ஆண்டு தோறும் நடைபெறும் திருவிழா வில் கதாநாயகனே தீச்சட்டி சிங்காரம்தான் ! சிற்றூர் காளி கோயிலுக்கு மட்டுமல்ல; ஐம்பது மைல் சுற்றளவில் உள்ள எல்லா ஊர்களிலும் திருவிழாக் காலங்களில் தீச்சட்டி தூக்கி ஆடுவதற்கு சிங்காரத்திற்கு ஏகப்பட்ட கிராக்கி!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுருளிமலை.pdf/10&oldid=1694871" இலிருந்து மீள்விக்கப்பட்டது