பக்கம்:சுருளிமலை.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 - சுருளிமலை 9 நல்ல வருமானம் அநேகமாக மாதந்தோறும் அவனுக்கு வேலையிருக்கும். தீச்சட்டி தூக்குகிற நேரமின்றி மற்ற நேரங் களிலும் தீச்சட்டி ஆட்ட உடைகளை அணிந்து கொள்வதில் அவனுக்கு அடங்காத ஆசை. ஊரார் அவனைப் பார்த்து சில சமயங்களில் காத்தவராயா! மதுரை வீரா!” என்றுகூட கேலியாக அழைப்பார்கள். இவன் எப்படி பார்வையிலும், நடை முறையிலும் நெருப்போ, அதுபோலவே அந்த நெருப்பில் பட்டதும் 'குபீர்' எனப் பற்றிக் கொள்ளும் கற்பூரமாக இருந் தாள் அவன் தங்கை !... கண் உணர்ச்சி வசப்படும் காட்சியைக் கண்டாலோ- அல்லது அப்படியொரு செய்தியைக் கேட்டாலோ போதும்; கற்பூரத்திற்கு சாமி ஆவேசம் வந்துவிடும். பிறகு உடுக்கு பம்பை எல்லாம் எடுத்து வர வேண்டியதுதான் ! அரைமணி நேரமாவது ஆடி ஓய்வாள்; அதற்குள் அவசர அவசரமாக அபிலாஷைக்காரர்கள் குறி கேட்க ஓடி வருவார்கள் அவளும் ஆடிக்கொண்டே குறி சொல்லுவாள். கற்பூரத்தின் மகிமை அந்த வட்டாரத்திலேயே பரவி இருந்தது. வயது பதினெட் டுக்குள்ளே தானிருக்கும்-பேரழகு எனக்கூற முடியாவிட் டாலும் கவர்ச்சிக்குக் குறைவின்றிக் காணப்படுவாள். களிலே அவளுக்கு ஒரு மயக்கும் சக்தியுண்டு. அவளது சிவந்த முகத்திலே நிரந்தரமாக அமைந்த ஒரு கருமையான மரு அவளுக்குத் தனிக் கவர்ச்சியைத்தான் தந்தது. எரிந்து விழும் அண்ணனைப் போலவே அவளும் வெடுக், வெடுக் " என்று பேசுவாள். அவளைத் தேவதையின் அவதாரம என்று கருதிக்கொண்டு அனைவரும் பக்தி செலுத்தினார்களே தவிர, அவள் நல்லவளா கெட்டவளா என்று ஆராயவதற்கு யாருமே முன் வரவில்லை. தேவ அம்சத்தைப்பற்றி ஆராய்வது பாம மல்லவா? அதனால் போலும்! தேவ அம்சம-தெய்வீகப் போர்வை - அவைகளிலேயிருந்து சமுதாயத்தை விடுவிக்க வேண்டுமென்ற நினைப்புடைய இளைஞன் ஒருவன் அந்த ஊருக்கு வந்து சேர்ந்தான். அவன் வந்த பிறகு ஊரிலே புரட்சி ஆரம்பமாகி விட்டது என்று கூறலாம்...

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுருளிமலை.pdf/11&oldid=1694875" இலிருந்து மீள்விக்கப்பட்டது