பக்கம்:சுருளிமலை.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 மு. கருணாநிதி • புரட்சி ஏற்படுத்தக்கூடிய தோற்றமோ, முக அமைப்போ சிறிதுமில்லைதான் அவனிடம் ! புரட்சிக்காரன் என்றால் தீச்சட்டி சிங்காரத்தைப் போலவா இருக்க வேண்டும்? அமைதி நிறைந்த வதனமும், அதைவிட மென்மையான சொல்லுங் கொண்டு உலகத்திலே பெரும் புரட்சியை மூட்டிவிடவில்லையா கௌதம புத்தர்! காட்டாற்றிலே வெள்ளம் கரைபுரண்டு வருகிறதென்றால் அதற்காக நடைபெறும் ஆரம்பப் புரட்சி எவ்வளவு அமைதி யாக யாருக்கும் தெரியாமல் நடந்து விடுகிறது ! கடல் நீரைக் கதிரவன் நீராவியாக்குவதும், நீர் மேகங்களில் குளிர் காற்று மோதுவதும் எவ்வளவு அமைதியாக நடைபெறுகிற புரட்சிகள் ! மழை பொழிந்து, உலகம் வெள்ளக்காடாகும் வரையில், கடல், கதிர், காற்று இவைகள் நடத்திய அமைதியான புரட்சிக் கட் டத்தையாருமே கவனிப்பதில்லையே ! ஊர் அந்த அமைதியான புரட்சியின் விளைவு உலகைப் பெரிதும் வாழ்விப்பதாகவும், சிறிதளவு அழிப்பதாகவுமே முடி கிறது; அது தவிர்க்க முடியாதது! அது போலவே மிருது வான உள்ளத்திலேயிருந்து புரட்சிக கனல் புறப்படுகிறது. அப்படியொரு உள்ளந்தான் சிற்றூரில் முதன் முதலாக அடி யெடுத்து வைத்தது. ஆசிரியர் அறவாழியை அந்த மக்கள் சற்று ஆச்சரியத்துடன் வரவேற்றார்கள். ஏனெனில் இதுவரை அவர்கள் ஒரு இளைஞரை ஆசிரியராகக் கண்ட தில்லை. தலை நரைத்த, கொட்டை கட்டிய கிழடுகளையே கண்டு கண்டு, ஆசிரியர் இப்படித்தானிருக்க வேண்டுமென்று தீர் மானித்திருந்தவர்கள் அந்த ஊரார். அவர்கள் அறவாழியை வியப்போடு நோக்கினர். அறவாழி ஊருக்கு வந்த அன் றைக்கே சிறு சச்சரவு - அதற்குக் காரணகர்த்தா, கரகமாடி கண்ணன்... அழகானவன் - - அரும்பு மீசையும் அரிமா நோக்கும் கொண்ட வாலிபன்- ஆழ்ந்த பக்திமான் பூக்கரகம் எடுத்து ஆடுவதில் அவனுக்கு நிகரான திறமைசாலி யாருமே இல்லை யெனப் புகழ் பெற்றவன். பரம்பரை வழக்கம்- பழமை- இவை களில் அசைக்க முடியாத பற்றுதல் கொண்டவன். எடுப்பார்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுருளிமலை.pdf/12&oldid=1694876" இலிருந்து மீள்விக்கப்பட்டது