பக்கம்:சுருளிமலை.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுருளிமலை 11 கைப்பிள்ளை ! யார் எதைச் சொன்னாலும் அதைக்கேட்டு நடக்கக் கூடிய சுபாவம். அவனுக்கும் தீச்சட்டி சிங்காரத்துக்கும், அந்த ஊரிலே பரம்பரைப்பகை! அவர்கள் பாட்டன் பூட்டன் காலத்தி லேயிருந்து இரண்டு குடும்பங்களுமே தீச்சட்டி ஆட்டம் கரக ஆட்டம் இவைகளிலே போட்டிபோட்டு சண்டையிட்டுக் கொண்டு விலகி வாழ்பவை. எல்லாச் சண்டைகளையும் தீர்த்து வைக்கும் பஞ்சாயத்தார் பரமசிவம் இவர்கள் சண்டையைத் தீர்க்க முடியாமல் திணறுகிறார்... வெகுளி ! வெளுத்ததெல்லாம் பால் அவருக்கு ! ஊரிலே அவர் வீடு பரம்பரைப் பணக்காரவீடு. சுத்தக் கருமி - சுருட்டு ஒன்றை அணைத்து அணைத்து மூன்று நாளைக்குப் புகைப்பார். ஏழை விவசாயிபோலத் தோற்றமளிக்கும் அவருக்கு எழுபது ஏக்கராவுக்கு மேல் நிலபுலம், தோட்டம் துரவுகள் உண்டு. எல்லாம் ஆண்டவன் தந்தது" என்ற வாசகத்தை ஒரு நாளைக்கு ஆயிரம் தடவையாவது உச்சரிக்கும் அவருக்கு ஒரு பைத்தியத்தை மகனாகத் தந்து விட்டார் ஆண்டவன். பைத்தி யக்கார மகனைப்பற்றி விளக்கம் எதற்காக உங்களுக்கு ! கதையில் பல இடங்களில் வரப்போகிறான்--அப்போது சுவைக்கலாம் அவ னது செயல்களையும் பேச்சுக்களையும் ! ஓரளவுக்கு அறிமுகம் முடிந்து விட்டது. இடையிடையே யலர் வருவர்; போவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுருளிமலை.pdf/13&oldid=1694877" இலிருந்து மீள்விக்கப்பட்டது