பக்கம்:சுருளிமலை.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 . மு கருணாநிதி கருதினான் அறவாழி அவமானமான முறையில் பேசுகிறார் - ஆயினும் பொறுத்துக் கொளவோம் என்ற நினைப்புகூட வாரமலே அவன் அமைதியாக இருந்தான். சின்னப் பிள்ளைங்கிறத்துக்கு சரியா, வந்ததும் வராதது மாக என்மகன் முகத்துலே கரியைப்பூசிட்டியே!" என்று மேலும் தொடர்ந்தார் பரமசிவம். ● 6 கரிபூசினே ? ? நானா இல்லவே இலலையே தம்பி முகத்திலே இருந்த கரிக்கோடுகளை அழிக்கப்பார்த்தேன் - தம்பி இதோபாருங்கள் ; அழித்ததில் என்கைகூட கைகளை விரித்துக்காட்டினான் இணங்கவிலை - கருப்பாகிவிட்டது ! ' என்று அறவாழி. கையென்னாங்க; ஆளுமனசுகூட கருப்புதான் பகுத தறிவுக்காரருபாருங்க!' என்று கேலிச்சிரிப்பு சிரித்தான் கரக மாடிக கண்ணன். காரு 6. 26 - நீ இன்னும் போகவில்லையா?" என்றார் பரமசிவம். 6 தூ!' எப்படிங்க போகமனசுவரும் ? பெரியமேதாவி வந்திருக் அவரைப் பார்த்துக்கிட்டே இருக்கலாம் போலிருக்கே!" என்று கூறிவிட்டு கண்ணன் அறவாழியை ஒருமுறை முறைத்து விட்டு. எனசொல்லிக் கொண்டே இரண்டாம் தடவை யாக வெளியே சென்றான். அவன் வெளியில் சென்ற சில விநாடிகளுக்கெல்லாம் சிரஞ்சீவி, 'அப்போ ! அப்பா' என்று கூறிக்கொண்டு குதித்தோடிவந்து பஞ்சாயத்தாரைக் கட்டிப் பிடித்துக்கொண்டான். அவர் திணறினார். அந்த விசித்திரமான வீட்டைப்பார்க்க அறவாழிக்கு ஆச்சரியமாக இருந்தது. 06 என்னடா நடந்தது?" என்றார் தந்தை. அப்போ! தெருவிலே பெரியசண்டை வரப்போறது- யானைசேனை குதிரைப் படை யெல்லாம் வரப்போறது! கப்பல் சண்டை-பீரங்கிச் சண்டை ! அப்பறம் சாவு-கொலை! அப்பறம் அமைதி - சுடுகாடு-மண்ணாங்கட்டி-அரோகரா-கோவிந்தா- கோவிந்தா!" இப்படி சிரஞ்சீவி ஆட்ட பாட்டத்தோடு கத்த ஆரம்பிததான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுருளிமலை.pdf/132&oldid=1703120" இலிருந்து மீள்விக்கப்பட்டது