பக்கம்:சுருளிமலை.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 சுருளிமலை 13 வரா நிலத்தைக் கேடின்று வளர்த்து, ஆங்கு ஈர நிலத் தின் எழுத்தெழுத்தாக வழுவின்று இசைக்கும் குழலோன் தானும்," - என்று இளங்கோவடிகள், சிலப்பதிகாரத்தில் குழலோ னுக்குரிய இலக்கணச் சிறப்பு வகுத்திருப்பதை அவன் உணர மாட்டான். சிலப்பதிகாரம் என்றாலே என்னவென்று புரிந்து கொள்ள முடியாத தமிழ் இளைஞன்தான் அவன். குயில் கூவுகிறது-மயில் ஆடுகிறது- சிந்து பாடும் அரு வியென வர்ணிக்கிறோம். குயிலோ, மயிலோ, அருவியோ இசை இலக்கணம் கற்று சங்கீத இன்பத்தைப் பொழிபவை அல்ல. ஆனாலும் குயிலின் பாட்டை, மயிலின் ஆட்டத்தை மனிதர்கள் தரும் கலை விருந்துக்கு உவமையாக்கி விடுகிறார்கள்; கற்பனையாளர்கள். அது போன்ற ஒரு கவர்ச்சியும், கேட் போரை வயப்படுத்தும் சக்தியும் சுருளிமலையின் குழலோசை யிலே இருந்தது! 66 தாளம் தவறாமல், ராகம் பிசகாமல், சுருதி விலகாமல் ஆந்தை பாடினால் ஆகா, என்னே இசை இலக்கணம் !” என்று வியப்படைவாருண்டோ? "லயம்" வழுவாத, 'பாவம்" நழுவா தவாறு நடனமாடினாலும் வான்கோழியை மெச்சுவாரும் உளரோ ? மயிலுக்கும் குயிலுக்கும் உள்ள இயற்கைச் சிறப்பு, எப் படியோ சுருளிமலையின் குழலிசைக்கும் இருந்தது குளு குளுவென வீசும் வேப்பமரத்து மென் காற்றோடு அந்த இனிய நாதமும் கலந்து, காலை நேரத்தில் கழனி நாடிச் செல்வோருக் கும் - உழைப்பு தர ஓடுவோர்க்கும் புதிய தெம்பை அளிக்கும். - ஒரு சிலர் அவனைப் பார்த்து முணு முணுக்காமல் இல்லை.

  • பெரிய கிருஷ்ண பரமாத்மா இவரு கோகுலத்திலே குழல்

ஊ ஊதுராரு!" எனக் கேலி பேசுகிற பெரிய மனிதர்களிடத்திலே அவன் எப்படி மதிப்புரை பெற முடியும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுருளிமலை.pdf/15&oldid=1694879" இலிருந்து மீள்விக்கப்பட்டது