பக்கம்:சுருளிமலை.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 மு. கருணாதி நி "பொன்னையாவுக்கும் பூஞ்சோலைக்கும் வந்து பிறந்ததே பிள்ளை - குலம், கோத்திரம், குடும்பம் எல்லாத்தியும் மறந்துட்டு குழல் ஊதுது, குழல் !" எனக் கிண்டல் செய்தவாறு போகிறவர் களை சுருளிமலை கவனிக்காமலில்லை. அந்தப் பேச்சுக்களையெல்லாம் அவன் மிக அலட்சியமாகக் கருதினான். அவைகளுக் கெல்லாம் பதில் சொல்லி பகையை வளர்த்துக் கொள்ள விரும்ப வில்லையோ என்னவோ, அவனுண்டு வேப்பமரம் உண்டு என்ற அளவில் காலங் கடத்தி வந்தான். இள ரத்தம், துடிப்பு நிறைந்த பருவம், இவைகளுக்கு இயற்கை யாக இருக்கக் கூடிய பரபரப்பு, படபடப்பு எதுவுமே யில்லை அவனிடம்! - - பதினான்கு வயது இளைஞன் - பழுத்த கிழவரைப்போலவே அமைதியாகக் காணப்படுவான். முகத்தின் அழகு, அகத்தின் பிரதி பலிப்புத்தானே அவனது அமைதி கலந்த ஆழ்ந்த பண்பை உணர்வதற்கு யாருமில்லைதான் அவ்வூரில் ! அதனால் சிலர் அவனை சோணிப்பிள்ளையென்றும் அழைத்தார்கள். - அவன் தவழ்ந்தாடும் பருவத்தில் பல் முளைத்தவுடனே. வீட்டில் பால் கொழுக்கட்டை சுட்டு சாமிக்குப் படைத்தார்கள். அப்போதே அவனுடைய குணம் எப்படியிருக்குமென்று அவன் தாய் கண்டு பிடித்து விட்டதாகப் பிறரிடம் பெருமையடித்துக் கொள்வாள். குல தெய்வத்துக்கு நேரே கொழுக்கட்டைப் படையலைப் போட்டு, ஒரு முறத்தில் விளையாட்டுப் பொம்மை, ஒரு ரூபாய் நாணயம், கத்தி, ஒரு கொழுக்கட்டை எல்லாவற்றை யும் வைத்து, குழந்தை சுருளியைத் தவழவிட்டு, அவன் அந்தப் பொருள்களில் எதை ஆவலோடு எடுக்கிறான் என்று சோதித்துப் பார்த்தார்கள். குழந்தை தவழ்ந்து கொண்டேபோய் கொழுக் கட்டையைத் தான் எடுத்தது. அது முதலே இது சாப்பாட்டு ராமனாகத்தான் இருக்குமென்று அக்கம் பக்கத்தாரும் தாயாரும் முடிவு கட்டி விட்டார்கள். அந்த முடிவின்படியே அவனை வளர்க் கவும் தொடங்கினார்கள். அவனும் எதைப்பற்றியும் கவலை கொள் ளாமல், எந்தப் பொறுப்பிலும் தன்னை சிக்க வைத்துக் கொள் ளாமல் வளர்ந்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுருளிமலை.pdf/16&oldid=1694880" இலிருந்து மீள்விக்கப்பட்டது