பக்கம்:சுருளிமலை.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 மு. கருணாநிதி சிங்காரந்தான் வேணுங்கிறான்! நான் ஊருக்கென்று ஒருத்தன்; யாருக்கென்று ஆடுவேன்? போய்த் தொலைந்தேன். இன்னைக் குத்தான் திரும்பினேன். ஒரு விஷயம் தெரியுமா தம்பீ; அதுக் குத்தான் உங்க வீட்டைத் தேடிகிட்டு வந்தேன், " எனப் பீடிகை போட்டான் சிங்காரம். - எங்க வீட்டைத் தேடிகிட்டு வேப்பமரத்தடிக்கு வந்துட்டீங் களே! அதிருக்கட்டும்; என்னண்ணே விஷயம்? ' சுருளி மலையின் கேள்வியிலேயுள்ள ஆவலைக் கண்டுபிடித்த சிங்காரம் நீண்ட முன்னுரையோடு பேச்சைத் தொடர்ந்தான். "காட்டூர் காளிகட்டித் திருவிழாவுக்குப் போயிருந்தேன். அடடா! எக்கச்சக்கமான கூட்டம்-எள் விழ இடமில்லையென்றால் பார்த்துக் கொள்ளேன் !” சுருளிமலை குறுக்கிட்டு, "எள்விழ ஏன் இடமில்லை? ஜனங்கள் தலையிலே விழுந்தா தாங்க முடியாதா என்னா, எள் விழுவதை ?" என்று கேட்டதும். 66 " அடேய்! குறுக்கே பேசாதே! விஷயத்தைக் கேளுடா தம்பி! காட்டூர் முடிந்து கனியா குறிச்சி போனேன். சமயபுரம் போனேன். எல்லா எடத்திலும் ஏகக் கூட்டம்! நம்ப தீச் சட்டி ஆட்டத்துக்கு ஏகப்பட்ட மதிப்பு ! நாலு நாள் தொடர்ந் தாப் போலே காலையிலே கப்பரைச் சட்டியைக் கையிலே எடுத்து. பத்து மைல் சுற்றளவுக்கு நடந்தே போய் ஆடணு மனா முடியிற வேலையா? நாலாம் நாள் காலையிலே தீச்சட்டி எடுத்து ஆடிக்கிட்டேயிருக்கும்போது எனக்கு ஒரேகளைப்பு ! ஒரே மயக்கம் ! எதிர்த்தாப்போல ஒரு பெண்ணு - அழகான குட்டி! அவளையே பாத்துகிட்டு என்னை மறந்து ஆடிகிட்டே யிருந்தேன்....." என்று பேச்சை நீட்டிய சிங்காரத்திடம் சுருளிமலை, 11 அடடா! என்னண்ணேயிது, எனக்கிட்ட வந்து இதெல் லாம் பேசிகிட்டு......" என்று வெடுக்கென்று பதிலுரைத்து எழுந்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுருளிமலை.pdf/18&oldid=1694882" இலிருந்து மீள்விக்கப்பட்டது