பக்கம்:சுருளிமலை.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 மு. கருணாநிதி அதற்குள் பஞ்சாயத்தாரும் மற்றவர்களும் அங்கே வந்து சேர்ந் தார்கள். சிங்காரம் அந்தப் பெண்ணுடைய முகத்தை மூடியிருந்த துணியை விலக்கினான். அவ்வளவுதான்; அய்யோ!" என்று அலறிவிட்டான் ! 0.0 66 அவனை ஊரார் கவனித்து என்னவென்று கேட்பதற்குள் அய்யோ, நீயா ?" என்று உரக்கக் கூவி, தலை சுற்றிக் கீழே சாய்ந்து விட்டான் சிங்காரம். 2 அவள் அவனுக்கு அறிமுகமானவளாய்த்தானிருக்க வேண் டும். அவள் பிணமானதைக் கண்டு மூர்ச்சித்துப்போய் விட் டான் என்றால் அவளுக்கும் அவனுக்கும் உறவுகூட இருக்க வேண்டும். அந்த உறவும் உள்ளங்கள் ஒன்றி விட்ட இன்ப உறவாக இருக்கு மென்பதற்கு அறிகுறியாகத்தான் சிங்காரம் போட்ட கூச்சல் அமைந்து விட்டது. கையிலே தீச்சட்டியேந் திக் கர கரவெனப் பம்பரம் போல் சுழன்றாடும் சிங்காரத் திற்கு சமயபுரத்திலே புது அனுபவமே ஏற்பட்டது என்று கூறலாம். ஆடும்போது சட்டி கீழே விழுந்து சிதறி விட்டது என்பதுகூட அல்ல அந்த அனுபவம். அது கை தவறுகிற அளவுக்கு அவனுக்கு மையல் மூட்டிய ஒரு வாலைக் குமரியை அவன் அந்த ஊரில் சந்தித்தான்... பம்பையும் தவுலும் போட்டி போட்டுக் கொண்டு முழங்கின. வாத்தியங்களின் ஒலியால் எழுகிற உணர்ச்சிக்கு மேலும் வலுவூட்டுவதுபோல் சாம்பிராணிப் புகை தெருவெங்கும் மணம் பரப்பியது. வேப்பிலைக் கொத்துக்களைக் கைகளில் பிடித்து ஆடிக் கொண்டும், விபூதியை வாயால் ஊ தி ஊதி நாலா பக்கங்க ளிலும் ஓடிக் கொண்டும் ஒரு பயங்கரமான பக்தியைப் பரப்பும் கைங்கரியத்தில் குட்டிப் பூசாரிகள் எல்லாம் ஈடுபட்டிருந் தார்கள். தாயே! தாயே! லோக மாதா ! காளீ! மாரீ! தேவீ ! என்ற முழக்கங்கள் வேறு பாமர மக்களுக்குப் பக்திப் போதையூட்டி அவர்கள் தலையைக் கிறு கிறுக்க வைத்தன. 66

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுருளிமலை.pdf/22&oldid=1694905" இலிருந்து மீள்விக்கப்பட்டது