பக்கம்:சுருளிமலை.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 மு. கருணாநிதி ய அவள் மூக்கிலிருந்த குங்குமத்தைத் துடைத்துக் கொண்டே வீட்டு வாசலில் போய் நின்றுகொண்டு ஆட்டத் தைக் கவனிக்க ஆரம்பித்தாள். சிங்காரமும் புதிய உற்சாகத் தோடு ஆட ஆரம்பித்தான். ஆட்டக்காரனின் காலை ஒடிக்க. வேண்டுமென்று கங்கணம் கட்டிக்கொண்ட வாத்தியக்காரர் களின் கைகள் ஒடிந்து போகிற அளவுக்கு அவ்வளவு அற்புத மாக ஆட ஆரம்பித்தான். தீச்சட்டியில் கொழுந்துவிட்டெரியும் தீயின் சிகப்பு நாக்கு கள் உமிழும் புகை, வான் நோக்கி எழுகின்ற காட்சியும், அந்தப் புகை மண்டிலத்திற்குக் கீழே அவன் சுழன்று சுழன்று ஆடு வதும் அவள் உள்ளத்தில் ஏதோ ஒரு புதிய உணர்வைத் தோற்றுவித்தே யிருக்கவேண்டும் இல்லாவிட்டால் அவள் கண்களில் அந்தப் புத்தொளி எழக் காரணமேயில்லை. சிங் காரத்தின் கையிலே இருப்பதல்ல தீச்சட்டி; தன் இதயத் திலே ஜுவாலை யெழுப்பி வெம்மையைக் கொட்டுவதுதான் உண்மையான தீச்சட்டியென அவள் கற்பனை செய்து கொண் டாள். சிங்காரம் புதிய புதிய ஆட்டங்கள் ஆடினான். ஆச்சரி யமான நடைவரிசைகள் போட்டான். தீச்சட்டியை மிகப் பயங் கரமாக எரிய விட்டான் அவன் ஆடிய இடத்தில் அரை அடி ஆழத்தில் பெரிய குழியே ஏற்பட்டுவிட்டது. 66 இவனா ஆடுகிறான்? அம்பாள் ஆட்டிவைக்கிறாள்! என்றனர் பக்தர்! 66 அதுவல்லவோ கொடுத்த நிர்வாகிகள். ஆடுகிறது!" என்றனர் தண்ணீர் எதுவுமே காரணமில்லை; எதிரே நிற்கும் ஏந்திழைதான் காரணம் என்பதை சிங்காரம் சொல்லவில்லை. அவன் அநாயா சமாக ஆடிக் கொண்டிருந்தான். கடைசலிட்டு உருவாக்கியது போன்ற வடிவம் -மேனி யெங்கும் இளமையின் பூரிப்பு-இருகோவைப் பழங்களைப் பொருத்தியது போன்ற உதடுகள் - எலுமிச்சம் பழ நிறம் - அவ ளுக்கு அருகாமையில் திண்ணையில் ஒரு பூனைக்குட்டி. அதைத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுருளிமலை.pdf/24&oldid=1694907" இலிருந்து மீள்விக்கப்பட்டது