பக்கம்:சுருளிமலை.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுருளிமலை 23 தூக்குவதும் அதன் மென்மையான உடலைத் தடவிக் கொடுப் பதும் பிறகு அதைக் கீழே விடுவதுமாக அவள் சிங்காரத்தின் ஆட்டத்தை ரசித்துக் கொண்டிருந்தாள். கண்கொட்டாமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தால் பக்கத்திலிருப்பவர்கள் என்ன நினைப்பார்களோ என்ற பயம் ! களங்கமில்லாமல் அவ் வாறு பார்ப்பவர்கள் அருகிலிருப்பவர்களைப் பற்றிக் கவலைப்பட மாட்டார்கள். உள்ளத்தில் ஏதோ ஓர் உணர்ச்சி பொங்கிக் கிளம்புவதை மறைக்க முடியாதவர்கள் பக்கத்திலுள்ளவர் -களுக்குப் பயப்படுவது இயற்கைதானே ! கமல மலர், கதிர வனிடம் காதல்கொண்டு மலர்கிறது என்பது கவிஞர்களின் கைச்சரக்கு! ஆம்பல், நிலவைத் தழுவிட மலர்கிறது என் பதும் கற்பனையாளனின் கனவேதான்! காதல் என்ற வார்த்தைக்கு அங்கு பொருளுமில்லை ; வேலையுமில்லை ! 6. 60 "9 அவளுக்கு மட்டுமென்ன; காதல் என்ற வார்த்தை தெரியுமா? தெரியாது! ஆனாலும் அவனைக் கண்ட அவள் உள்ளத்தில் ஒரு விதப் புது மலர்ச்சி ஏற்பட்டு விட்டது. அல்லி, தாமரைகளின் மலர்ச்சியில் காதல்" அடிப்படையாக அமைவதில்லை. இயற்கை நியதி அது ! அவள் கொண்ட மலர்ச்சியிலோ காதல் எனும் உணர்வு ஊமை நிலையிலே அடங்கிக்கிடந்து அவளை அவன்பால் சேர்க்கத் துடித்தது. பசியெடுத்தக் குழந்தை "சோச்சி" என்கிறது. "சோச்சி " என்றால் சோறு! அந்தச் சோறு, அரிசியால் ஆக்கப்படுகிறது. அரிசி, நெல்லிலே கிடைக்கிறது. நெல் விளைக்க எவ்வளவோ பேர் வியர்வை சிந்த வேண்டியிருக்கிறது என்பதையெல்லாம் குழந்தை அறிந்திருப்பதில்லை. அறிந்திருக்கும் நாமே, சோறு தின்னும் நேரத்தில் அது கிடைத்த விதம்பற்றி சிந்திப்பதில்லை. அதுபோலவே அவள் அவனிடம் தன்னைப் பறிகொடுத்தாள். அதற்குப் பெயர் "காதல் என்று சொல்ல அவளுக்குத் தெரி யாது. "சோச்சி" கேட்கும் குழந்தை நிலையிலேயே இருந் தாள். பூனையை முகத்தோடு முகம் வைத்து இறுக அணைத்துக் கொண்டாள். பாவம், அது மியா" என்ற ஒலியோடு அவள் கரத்திலிருந்து விடுபட்டு கீழே குதித்தது. அது குதித்த வேகத் 66

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுருளிமலை.pdf/25&oldid=1694908" இலிருந்து மீள்விக்கப்பட்டது