பக்கம்:சுருளிமலை.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுருளிமலை 25 வாயில் வந்தவாறு பேசி அனுப்பிவிட்டாள். யாரோடும் அவள், அதிகமாகப் பேசுவதே இல்லையாம். அடுத்தவீட்டு எதிர்த்த வீட்டுப் பெண்களோடுகூட அவள் கல கலப்பாகப் பேசுவது. கிடையாது என்று கேள்விப்பட்டேன். இதற்குமேல் அவளைப் பற்றி எனக்கொன்றும் விபரம் தெரியாது. அவள் பெயர் மட்டும் மனாவாம்! 99 நிர்வாகி கொடுத்த விளக்கம், சிங்காரத்துக்கு ஆச்சரியமாக இருந்தது. இன்னும் ஆவலைத்தூண்டியது. சிற்றூரில் "சிடு மூஞ்சி" என்ற பெயர் அவனுக்குத்தான் உண்டு. அவளும் தன்னைப் போலவே இருக்கிறாளேயென்று உள்ளுக்குள் மகிழ்ந்து கொண்டான். எப்படியாவது அவளை நேரில் சந்தித்து விடுவது என்று முடிவு கட்டிக்கொண்டான். மைனா! அவன் மனதில் புயலைக் கிளப்பி விட்ட மங்கை! அவளைக் காண அவன் புறப்பட்டு விட்டான். அடர்ந்த இருள்- அந்த ஊரில் மயான அமைதி நிலவிக் கொண்டிருந்தது. சிங்காரம் யாருமறியாமல் புறப்பட்டு அவள் வீடு நோக்கி நடந் தான்! யாராவது பார்க்கப்போகிறார்களே என்ற பயம் அவனைத் தடைப்படுத்தவில்லை. காரணம்; கொலை செய்யக்கூடத் துணி வைக் கொடுக்கக் கூடிய மதுவை வேண்டிய மட்டும் அருந்தி யிருந்தான். குடிகாரனுக்குத்தான் எத்தனை பாதுகாப்பு! குடித்த வனுக்கு புதிய தைரியம் பிறக்கிறது - அதோடு மாத்திரமா? அவன் ஏதாவது தவறு செய்து விட்டாலும் "அய்யோ பாவம்; குடிவெறியில் செய்து விட்டான்!" என்று சமுதாயத்தில் சில நேரங்களில் மன்னிப்பும் கிடைத்து விடுகிறது. ய מ அந்தப் பாதுகாப்புகளுடன் சிங்காரம், மைனாவின் வீட்டுப் படியை மிதித்தான். கதவு சாத்தப்பட்டிருந்தது. மெதுவாகத் தள்ளிப் பார்த்தான். திறக்கவில்லை. இன்னும் கொஞ்சம் வேக மாகத் தள்ளினான். உள்ளே ஏதோ சப்தம் கேட்டது. கதவு திறந்து கொண்ட து. சப்தம் எதுவுமில்லை ; கழன்றிருந்த தாழ்ப் பாள்தான் கீழே விழுந்திருக்கிறது. மதுபோதையிலும் சிங்காரம் நிதானமாக நடந்து கொண் டான். உடனே உள் நுழையவில்லை. எழுந்த ஒலிக்கு ஏதாவது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுருளிமலை.pdf/27&oldid=1694910" இலிருந்து மீள்விக்கப்பட்டது