பக்கம்:சுருளிமலை.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 மு. கருணாநிதி எதிரொலி கேட்கிறதா என்று கவனித்தான். பூனைக்குட்டியின் "மியாவ்" சப்தம் மட்டும் ஒருமுறை கேட்டுப் பிறகு அடங்கி விட்டது. 'ஸ்! அதான் தின்னுட்டியே... தூங்கு! தூங்கு!" என்று அவள் தூக்கக் கலக்கத்தில் கூறியதும் அவன் காதில் விழுந்தது. - பிறகு மெதுவாக கதவை அகலத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தான். பாயொன்றில் மைனா தூங்கிக் கொண் டிருந்தாள். அருகே பூனையும் உறங்கிக்கொண்டிருந்தது. இரவு நேரத்தில் பூனை விழித்திருந்து எலி தேடும் என்பார்களே ; இந்தப் பூனை சுகமாகப் படுத்துத் தூங்குகிறதே என வியப்பு கொண்டான்.வயிறு பிதுங்குகிற அளவுக்கு ஆகாரம் கொடுத்து விட்டால் பிற கேன் விழிப்பு அலைச்சல் - எல்லாம் ! அரைப் பட்டினி கால் பட்டினிக்குத்தானே அந்தத் தொல்லையெல்லாம்! சிங்காரம், மைனா!" என்று கூப்பிடலாமா என நினைத் தான். நா எழவில்லை. அவள் முகத்தையே உற்றுநோக்கிக் கொண்டிருந்தான். அவள் கழுத்தைப் பார்த்தான். மணிகள் கோர்த்த மாலைகள் அணிந்திருந்தாள் தன்னந்தனியாக அந்த வீட்டில் அவள் உறங்குவது ஒரு அழகாகவே இருந்தது. அவன் கையிலேயிருந்த தீச்சட்டி நழுவி விழுந்து சிதறுவதற்குக் கார ணமாயிருந்த இளமையின் பூரணப் பொலிவை விழியால் விழுங் கினான். அந்த உடலில் நடுக்கம் பிறக்க ஆரம்பித்தது. மதுவெறி தணியத் துவங்கியது. அவளது கழுத்தின் பின்புறத்தில் ஏதோ 66 பள பள வென்று மின்னியது. குனிந்து உற்று நோக்கினான். அவள் போட்டிருந்த மாலையில் கோர்க்கப்பட்டு, பின் கழுத்தின் பக்கமாகத் தலையணையில் படிந்திருந்த தாலிதான் அது ! . அவள் கழுத்தில் தாலியைக் கண்டதும், சிங்காரத்தின் போதை முழுவதும் எங்கேயோ பறந்து போயிற்று. வீட்டை விட்டுப் போய்விடத் திரும்பினான். கால் இடறிய காரணத்தால் ஒரு பாத்திரம் பெரிய ஒலியுடன் உருண்டது விருட்டெனப் பாய்ந்தது பூனை ! சிங்காரத்தின் கழுத்திலே கூரிய நகங்களால் பிராண்டியது. மைனா திடுக்கிட்டு விழித்து, ஓடிப்போய் கதவை சாத்திக்கொண்டு, "யாரது? நில்!" என்று கத்தினாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுருளிமலை.pdf/28&oldid=1694911" இலிருந்து மீள்விக்கப்பட்டது