பக்கம்:சுருளிமலை.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுருளிமலை கொஞ்சம் தண்ணி வேணும் ! " 29 மைனா, எழுந்து மண்குடத்திலேயிருந்த தண்ணீரை ஒரு குவளையில் பிடித்து வந்து அவனிடம் கொடுத்தாள். கொடுக் கும்போதும் அவள் கைகள் நடுங்கின. குவளையை உதட்டில் வைத்து நீர் பருகிய சிங்காரம், தூதூ! ...அப்பா! அப்பா !" என்று சப்தமிட்டு தண்ணீரை யெல்லாம் கீழே துப்பி விட்டு, வாயைத் துணி கொண்டு பர பரப்போடு துடைத்துக்கொண்டான். மைனாவுக்கு விஷயம் விளங்கிவிட்டது. உப்பு வைத்திருந்த படியைக் குவளையென்று நினைத்து அதிலே தண்ணீரை கொண்டு வந்து கொடுத்து விட்டாள். பட படப்பிலே நடந் துவிட்ட தவறு! " மன்னிச்சுக்குங்க! வாய் கொப்பளிக்க வேற தண்ணி வேணுமா? என்று புன்முறுவலோடும் - அந்தப் புன் முறுவலை உடனே மறைக்கும் சோகப் பார்வையோடும் கேட்ட மைனாவை இறுகத் தழுவிக்கொள்ளத் துடித்தது சிங்காரத்தின் நெஞ்சம். ஆயினும் அவள் கழுத்திலே மின்னுகிற தாலி, அவன் பாய்ச்சலைத் தடுத்திடும் உயர்ந்த வேலியாகக் குறுக்கே நின்றது. 'தண்ணி வேண்டாம்-இப்போது எனக்கு வேண்டிய தெல்லாம் நீ ஏன் அழுகிறே என்ற காரணந்தான்!" என்று சிங்காரம் தழுதழுத்த குரலில் அவள் முகத்தைப் பார்த்தவாறு பதில் கூறினான். யாக ஒரு - - அவ்வளவு நேரத்துக்குப் பிறகு, தொடர்பில்லாத கேள்வி அவளுக்கே தேவையற்றது என்று தெரிந்தும்கூட கேள்வி பிறந்தது; " நீங்க ஏன் இங்க வந்தீங்க?" என்று! "தீச்சட்டி ஆடும்போது நீ ஏன் என்னை அப்படிப் பாத்தே? அதனால்தான் வந்தேன்?' தயவு செஞ்சு போய்டுங்க!” ஏன் மைனா என்னைப் போகச் சொல்றே? - சு " உங்க காலைப்பிடிச்சு கெஞ்சுகிறேன்; தயவு செஞ்சு போயிடுங்க!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுருளிமலை.pdf/31&oldid=1694915" இலிருந்து மீள்விக்கப்பட்டது