பக்கம்:சுருளிமலை.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

65 சுருளிமலை 31 தாலி போட்டுக் கொண்ட பிறகு நீ மாத்திரம் என்னை உயிரை வாங்குகிற மாதிரிப் பார்க்கலாம்; நான் மாத்திரம் உன்னைத் தொடக்கூடாதோ?' 66 என்னை நானே மறந்து தப்பு பண்ணி விட்டேன். மன் னிச்சுடுங்க. தயவு செஞ்சிபோய்டுங்க. என்னைக் காப்பாத் துங்க !" "உன்னை ஒரு தொந்தரவும் செய்றது இல்லை-கடவுள் மேல் சத்தியம் ! இதோ, ஒதுங்கி உட்கார்ந்துக்கிறேன். நீ விஷயத்தைச் சொல்லு; உன் புருஷன் இப்ப எங்கே ?" 16 16 'உயிரோடதான் இருக்கார் !" அது தெரியுது ; நீ மஞ்சள் குங்குமத்தோட இருக்கும் போதே அது தெரியுது! எந்த ஊர்ல இருக்காரு? " 81 கோயம்புத்தூருக்குப் பக்கத்திலே பேரூர்ல இருக்காரு!" 'அப்பறம் ஏன் அவரை விட்டுட்டு இப்படி வந்தே ?' ' தெய்வம் என் தலையிலே அப்படி எழுதியிருக்கு ; அதனால் வந்தேன் !" " புருஷனுக்கும் உனக்கும் ஏதாவது சண்டையா?" அய்யோ - தங்கமானவர் அவரு ! அவருக்கும் எனக்கும் சண்டை ஏன் வரப்போகுது !' " தங்கமான புருஷன்னு நீயே சொல்றே-அப்பறம் ஏன் இப்படி ஆச்சு ? ஓகோ! மாமியாருக்கும் உனக்கும் ஒத்துக் கொள்ள வில்லையோ? அடாடாடா !...... இந்த மாமியாருங்க மருமகள்களைப் படுத்துற பாடு...ரொம்பக் கொடுமை ! தானும் ஒரு காலத்திலே மருமகளாயிருந்தோம்கிறதையே மறந்துடு சாங்க! உன் மாமியாரும் அப்படித்தானா மைனா ?" " 66 " அய்யோ, எனக்கு மாமியாரே கிடையாதே !” நாத்தனாரு யாராவது...?' அதுவும் இல்லிங்க ! "அப்பறம் என்னா தகராறு ? புருஷன், இந்தக் கண்ண கியை விட்டுட்டு யாராவது மாதவி வீட்டுக்கு......

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுருளிமலை.pdf/33&oldid=1694917" இலிருந்து மீள்விக்கப்பட்டது