பக்கம்:சுருளிமலை.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 "" அதெல்லாமில்லை. கூடியவரல்ல !” น மு. கருணாநிதி அவர் அப்படியெல்லாம் போகக் வேறு என்னாதான் காரணம் ? நீ சொல்லித்தான் ஆக வேண்டும்!" " அய்யோ - அந்தப் பேச்சை அதோட நிறுத்துங்க...நான் அதை நினைச்சு நினைச்சு அழுதது போதும்-அந்தக் கதையை மறுபடியும் சொல்லி, ரெண்டுபேரும் சேர்ந்து அழவேண்டாம்!” மைனாவிடமிருந்து எப்படியும் அவளது சோகக் கதையின் மர்மத்தைப் புரிந்து கொள்ள வேண்டுமென்று சிங்காரம் துடி யாய்த் துடித்தான். வேறு வழியின்றி அவளும் சொல்ல ஆரம் பித்தாள்; இடையிடையே விம்மி விம்மி அழுதவாறு; "நான் பிறந்தது சிங்காநெல்லூர்-பஞ்சாலைத் தொழி லாளி என் அப்பா-ஒரே பெண் அவருக்கு நான் ஆலை வேலையில் கிடைக்கும் ஊதியத்தைக்கொண்டு நானும் அப்பாவும் வயிறு கழுவி வந்தோம். எனக்கோ வயது பதினாறைத் தாண்டி விட்டது. ஆண் பிள்ளைகளின் பார்வை என்மீது விழத் தலைப் பட்டது. காச நோயினால் கஷ்டப்படும் அப்பாவுக்கு, எப்படி யாவது அவர் கண் மூடுவதற்குள் எனக்கு ஒரு கல்யாணத்தைப் பண்ணிப் பார்த்துவிட வேண்டுமென்று ஒரே ஆசை அடித்துக் கொண்டது. "நானும் கல்யாணம் செய்து கொள்ளவேணும் என்கிற முடிவுக்கு வந்துவிட்டேன். அப்பா எங்கெங்கோ மாப்பிள்ளை பார்த்தார். அவர்களை யெல்லாம் எனக்குப் பிடிக்கவில்லை. கடைசியில் எனக்குப் பிடித்தமான மாப்பிள்ளையை நானே தேர்ந்தெடுத்து அப்பாவிடம் சொன்னேன். அப்பாவும் என் இஷ்டத்துக்கு விரோதமாக எதுவும் சொல்லாமல் சரியென்று தலையசைத்தார். என் கணவரை எங்கே எப்படித் தேர்ந்தெடுத் தேன் என்று சொல்ல வில்லையே...ஒரு நாள் பஞ்சாலைத் தொழி லாளர் சங்கத்தின் ஆண்டுவிழா அதிவிமரிசையாக நடத்தினார் கள். அந்தக் கொண்டாட்டத்தில் நாடகமொன்றும் ஏற்பாடு பண்ணியிருந்தார்கள். "அல்லி அர்ச்சுனா" நாடகம்! அதில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுருளிமலை.pdf/34&oldid=1694918" இலிருந்து மீள்விக்கப்பட்டது