பக்கம்:சுருளிமலை.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுருளிமலை 33 அர்ச்சுனனாக நடித்தவரின் நடிப்பு அபாரமாக இருந்தது. அவர் மேடைக்கு வந்தாலே ஒரு களை! ஒரே கரகோஷம்! சுருள் கம்பிபோல வளர்ந்து அடர்ந்து காதுகளை மறைத்துக் கொண்டு கழுத்தைத் தொடுகிற அழகான கேசம்! முத்துக்களை எடுத்து வரிசையாக அடுக்கி வைத்ததுபோல பற்கள் ! செக்கச் சிவந்த மேனி! கச்சிதமான மீசை! - கம்பீரமான பார்வை! அவர் அல்லியைக் கொள்ளை கொண்டதாகத்தான் கதை ! ஆனால் அவர் என்னை அப்படியே கொள்ளை கொண்டு விட்ட தாக எண்ணினேன். நாடகம் முடிந்தது. முடிந்தது. வீட்டுக்கு வந்தேன். இரவெல் லாம் தூக்கம் வரவில்லை. ஒரே அல்லி அர்ச்சுனா கனவு தான்! மறுநாள் அப்பாவிடம் கொஞ்சமும் வெட்கமின்றி நான் அந்த அர்ச்சுனனைத்தான் கல்யாணம் செய்து கொள் வேன் என்று முடிவாகக் கூறிவிட்டேன். அப்பா, அந்த நடி கரைப்பற்றி விசாரித்தார். அவர் பெயர் ராஜபார்ட் பீதாம்பர பாகவதர்! மகளே! நான் போய் பீதாம்பரத்தைப் பார்த்து வருகிறேன். கல்யாணம் முடிகிற வரையில் விஷயம் ரகசிய மாக இருக்கட்டும். ஒரு வேளை அந்த பாகவதர் சம்மதிக்க வில்லை என்றால் ஊரிலே நம்மைப்பற்றி கிண்டலாகப் பேசு வார்கள் !" என்று கூறிவிட்டு அப்பா புறப்பட்டார். அதற்குள் நான் என் அர்ச்சுனரின் விலாசத்தைக் கேட்டறிந்து, என் னுடைய போட்டோப் படம் ஒன்றையும் வைத்து என்னை எப் படியும் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று அவசரமாகக் கடிதம் எழுதினேன். என் படத்தைப் பார்த்த அவர், அப்பாவிடம் தன்னுடைய சம்மதத்தை அறிவித்து கல்யாணத்துக்கு நாளும் குறித்துவிட்டார். மாப்பிள்ளை வீடான பேரூரிலேயே கல்யாணம் சிக்கன மாக நடந்து முடிந்தது. மாப்பிள்ளை கோலத்திலேகூட என் கணவர் அர்ச்சுனனைப் போலவே ராஜபார்ட் உடையில் இருந்து என்னை அதிகமயக்கத்தில் ஆழ்த்தினார். கல்யாணத்தன்றைக்கே ' முதல் இரவு' ஏற்பாடு செய் யப்பட்டுவிட்டது. வாழ்க்கையில் நானாகத் தேர்ந்தெடுத்துக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுருளிமலை.pdf/35&oldid=1694919" இலிருந்து மீள்விக்கப்பட்டது