பக்கம்:சுருளிமலை.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

D 34 மு. கருணாநிதி நானே கொண்ட என் இஷ்ட தெய்வத்தைத் தனியாக சந்திக்கப் போகிறோம் என்ற அளவில்லாத சந்தோஷத்தோடு படுக்கை யறையில் அடியெடுத்து வைத்தேன். என் உடம்பெல்லாம். ஏதோ ஒரு உணர்ச்சியால் பரபரப்படைந்தது. அவர் நிலைக் கண்ணாடிக்கு நேரே நின்று தன் அழகைப் பார்த்துக் கொண் டிருந்தார். நான் உள்ளே சென்றதும் என் கையைப் பிடித்து அருகே அழைத்து கட்டிலில் உட்கார வைத்தார். நாணம் தாங்கமுடியாமல் நான் உட்கார்ந்தேன் - என்னை, அல்லி ராணியாகக் கற்பனை செய்து கொண்டேன். பழங்கள் சாப்பிட்டோம். பால் அருந்தினோம். அவர் அங்கிருந்த. விளக்கை வாயால் ஊதி அணைத்துவிட்டார். கூடத்துக் கடி காரத்தில் மணி ஐந்து அடித்தது. விழித்துக்கொண்டேன். அறைக்குள்ளே வெளிச்சம் பரவியிருந்தது. அவர் நன்றாகத் தூங்கிக்கொண்டிருந்தார். கட்டிலுக்குப் பக்கத்தில் இருந்த முக்காலியில் ஏதோ ஒரு பொருள் பளபளவென்று மின்னியது. அதை கவனித்துப் பார்த்தேன். இரண்டு வரிசைப் பற்கள்! எனக்குத் தூக்கிவாரிப் போட்டது அவரைக் கூர்ந்து கவனித் தேன். அவருடைய வாயிலேயிருந்த பற்கள்தான் ! அய்யோ ! பொக்கை வாய்க்கிழவரா வாய்க்கிழவரா என் கணவர் ?" என்ற ஆத்திரத்தோடு-சிறிது நம்பிக்கையை வரவழைத்துக் கொண்டு அவர் முகத்தையே பார்த்துக்கொண்டு உட்கார்ந் திருந்தேன். புரண்டு படுத்தார். காதுப்புறம் தொங்கிக்கொண் டிருந்த சுருள் கேசம் சற்று விலகியது. காது பளபளவென்று மின்னியது. கவனித்தேன். விளக்கையேற்றிப் பார்த்தேன். பெருவியாதியின் ஆரம்பம்! அதைத்தான் அந்த அழகான கேசத்தால் மறைத்துக் கொண்டிருக்கிறார். கேசத்தை கையால் விலக்கிப் பார்த்தேன். என்ன கொடுமை - முழுவதும் கையோடு வந்துவிட்டது. ஒரே வழுக்கைத் தலை ! அவர் புரண்டு எழுந் தார். அதற்குள் நான், விளக்கைக் கீழே வைத்துவிட்டுத் தூங்குவதுபோல் பாசாங்கு செய்தேன். அவசர அவசரமாகத் தலையைச் சரிசெய்துகொண்டு, முக்காலியில் இருந்த பற்களை யும் எடுத்து வாயில் பொருத்திக்கொண்டு, நிலைக்கண்ணாடிக்கு நேரே நின்று அலங்காரத்தில் ஈடுபட்டார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுருளிமலை.pdf/36&oldid=1694920" இலிருந்து மீள்விக்கப்பட்டது