பக்கம்:சுருளிமலை.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 சுருளிமலை 37 தேடிப்போனது உண்மை என்றாலும், அந்தக் கிழவர், தான் யார் என்ற சுய உருவத்தைக் காட்டியிருப்பாரேயானால் ஏக்கமும் பிறந்திருக்காதல்லவா? இப்படி ஒரு ஏமாற்றமும். அதனால் அவரே குற்றவாளி ! ஆமாம்; இதுதான் நானே வழக்காடி, நானே வழங்கிக் கொண்ட தீர்ப்பு! தீர்ப்பின்படி நான் அவரைவிட்டு உடனடி யாக வெளியேறிவிடவேண்டும். அன்றிரவே என் பயணத்திற்கு ஆயத்தமாகி விட்டேன். எல்லோரும் தூங்கிக் கொண்டிருந்தார்கள். அவர் அறைக் குள்ளே படுத்திருந்தார். எனக்கு எப்படித் தூக்கம் வரும்? மெதுவாக எழுந்தேன். என் தந்தையின் பிணம் காலையில் வைக்கப்பட்டிருந்த கூடத்தில் மினுக் மினுக் என எரிந்து கொண்டிருந்த விளக்கிற்கு ஒரு கும்பிடு போட்டேன். கொல் லைப்புறக் கதவைத் திறந்துகொண்டு வெளியே புறப்பட்டேன். அது வரையில் கதவண்டை உட்கார்ந்து வெளியே போவதற்கு வழி பார்த்திருந்த இந்தப் பூனையும் என் பின்னால் வெளியே வந்தது. தனியாகப் போவானேன் என்று என் கணவர் வீட்டுச் சொத்தான பூனையையும் தூக்கிக்கொண்டேன். எங்கெங்கோ அடுத்த கேள்வி, எங்கே போவது என்று! சிங்கா நல் லூருக்கே போய் விடுவோம் என்று முதலில் என்று முதலில் நினைத்தேன். ஊர் வாயை மூட முடியாதே என்ற அச்சம்-கணவர் கண்டு பிடித்து விடுவாரே என்ற திகில்-அதனால் அந்த எண் ணத்தை மாற்றிக்கொண்டேன். அலைந்தேன். கடைசியில் இந்த ஊர் வந்து சேர்ந்தேன். குடியிருப்பதற்குக் குறைந்த வாடகையில் இந்த வீடும் கிடைத்தது. கையிலிருந்த கொஞ்சம் பணம் - போட்டிருந்த நகை நட்டுகளை விற்றதில் கிடைத்த பணம்-அதை வைத்துக்கொண்டு வயிறு கழுவி வரு கிறேன். போதுமா இன்னும் சொல்லவேண்டுமா கதையை?" என்று அழுதவாறு மைனா முடித்தாள். என் இனிமேல் உன் கதையை நான் சொல்லுகிறேன்!” -சிங்காரம் கனைத்துக்கொண்டு ஆரம்பித்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுருளிமலை.pdf/39&oldid=1694923" இலிருந்து மீள்விக்கப்பட்டது