பக்கம்:சுருளிமலை.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 மு. கருணாநிதி என்ன சொல்லப் போகிறான் என்று அவளும் ஆவலோடு எதிர்பார்த்தாள். 61 மைனா என்ற பெண், நாடகக்காரனின் வெளி வேஷத் திலே ஏமாந்து, அவனையே கல்யாணம் செய்து கொண்டு, அவனது சுயரூபம் தெரிந்தபிறகு அவனை விட்டு ஓடிவந்து விட்டாள். அப்படி ஓடி வந்தவள் ஒருநாள் தீச்சட்டி சிங்காரம் என்ற ஒரு வாலிபனை சந்திக்க நேரிட்டது. இருவருடைய கண் களும் காதல் பாஷை பேசிக்கொண்டன. சீந்தித்த அதே நாள் இரவு சிங்காரம் அவளுடைய வீட்டுக்குத் தைரியமாக வந்தான். அவள் அவனிடம் தன் வாழ்க்கை முழுவதையும் சொன்னாள். அதைக் கேட்ட சிங்காரம் மனம் உருகி, நெஞ்சம் இளகி, 'கவலைப்படாதே பெண்ணே! உன்னை நான் வைத்துக்காப்பாற்று, றுகிறேன்!" என்று கையடித்துக் கொடுத்தான். அவளும் சம்மதித்தாள். பிறகு இருவரும் சந்தோஷமாக வாழ்க்கை நடத்த, ஆரம்பித்தார்கள். " . சிங்காரம்,இதுபோலக் கதையைக் கூறி அவள் முகத்தைப் பார்த்தான். மைனாவின் கன்னங்களில் சிவப்பேறியது. தலை தானாகக் குனிந்து கொண்டது. அது, சம்மதத்தின் அறிகுறி எனப் புரிந்து கொண்ட சிங்காரம், அவள் தோள்மீது தன் முகத்தைப் பதித்தான். அவளும் அவன் முகத்தைக் கையால் வருடியவாறு, 'என்னை' மனைவியாகவே ஏற்றுக்கொண்டு எப்போதும் காப்பாற்றுவீர் களா?" என்று கண் கலங்கக் கேட்டாள். சிங்காரம், தழுதழுத்த குரலில், 66 கடவுள்மேல் சத்தியமாக உன்னை மறக்கமாட்டேன் ! " என்று உறுதி கொடுத்து அவளை அப்படியே அள்ளி அணைத்துக் கொண்டான். D அவள், அவன் பிடியிலேயிருந்து விடுபட்டு, தெருக் கதவின் தாழ்ப்பாளைச் சரிசெய்து சாத்திவிட்டு, மீண்டும் அவனிடம். வந்தாள். பூனை மெதுவாக அடுப்படிக்குச் சென்று அந்தக் கத. கதப்பில் படுத்துக் கொண்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுருளிமலை.pdf/40&oldid=1694924" இலிருந்து மீள்விக்கப்பட்டது