பக்கம்:சுருளிமலை.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 மு கருணாநிதி ஆயிரமாயிரம் இன்ப நினைவுகள் உள்ளத்திலே அலைமோத மைனா, வேலைகளைக் கவனிக்கத் தொடங்கினாள். படுத்திருந்த பாயைத் தொட்டுக் கும்பிட்டு, தலையணைக்கு முத்தமீந்து, இரண் டையும் சுருட்டி வைத்தாள். அடுப்படியில் படுத்திருந்த பூனைக் குட்டியைத் தூக்கி அதன் மெல்லிய ரோமத்தைத் தடவித் தடவி' மார்போடும் முகத்தோடும் அதை அணைத்துக்கொண்டு குதியாட் டம் போட்டாள். வீட்டு வாசலுக்குத் தண்ணீர் தெளித்துப் பெருக்கினாள். என்றுமில்லாதவாறு பெரியதும், அழகியதுமான கோலமொன்று போடவேண்டும் என்ற திட்டத்தோடு கோலமாக் கிண்ணத்தோடு தெரு வாசலை முற்றுகையிட்டாள் அவள் வாச லில் வைத்த ஒவ்வொரு புள்ளியிலும் சிங்காரத்தின் கம்பீரமான முகத்தைக் கண்டாள். கோலத்திற்கென வளைந்து வளைந்து செல்லும் கோடுகளில் எல்லாம் அவள், தன் வாழ்க்கையின் வளைவை எண்ணுவாள். வளைந்த கோடுகள் இணையும் இடத்தில் எல்லாம் தானும் சிங்காரமும் இணைந்ததை எண்ணி மகிழ்வாள். பெரியதும், அழகு செறிந்ததுமான கோலம் போட்டு முடிந்தது. ஊருக்குப் போகும்போது சிங்காரம் இந்தப் பாதையில்தானே போவார்; போகும்போது கோலத்தைப் பார்ப்பார்; அப்படிப் பார்க்கும்போது இதையும் பார்க்கட்டும் என்று, தீச்சட்டிபோல சிறுகோலம் ஒன்று போட்டு, தீயின்மீது ஒரு மலர் தெரிவது போலவும் சித்தரித்தாள்.. அவளுக்கே அது புதுமையாகவும் அற்புதமாகவும் தெரிந்தது. கோலத்தை திருப்திக்கு ஏற்றவாறு முடித்து விட்டோம் என்ற ஆனந்தத்தில் கோல மாக் கிண்ணத் தோடு தலைநிமிர்ந்தாள். நிமிர்ந்தவள் திடுக்கிட்டாள். கண்கள் சுழன்றன அவளுக்கு அவளையே அவளால் நம்பமுடியவில்லை. எதிரே பீதாம்பர பாக வதர் அவளையே வைத்த கண் எடுக்காமல் பார்த்துக்கொண்டு நின்றார். மைனா,ஒன்றும் பேசவில்லை. பேசவும் நா எழவில்லை. கோலமாக் கிண்ணம் அவளை அறியாமல் கீழே விழுந்து மாவு. வாசலெங்கும் சிதறி, கோலத்தை அலங்கோலமாக்கியது . அவள், வீட்டுக்குள் போய் விட்டாள். பீதாம்பரமும் அவளைத் தொடர்ந்து உள்ளே போனார். அவள் உள்ளே சென்று அப்படியே அசைவற்று நின்றாள். அவள் கண்கள் கலங்கி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுருளிமலை.pdf/42&oldid=1694926" இலிருந்து மீள்விக்கப்பட்டது