பக்கம்:சுருளிமலை.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 மு கருணாநிதி முடியா "நீ தான் எனக்குக் கடிதம் எழுதினாய். என்மீது ஆசை கொண்டு விட்டதாகவும் அதை மாற்றிக் கொள்ள தென்றும் கெஞ்சியிருந்தாய் உன் படத்தை வேறு அனுப்பி என்னை மயக்கினாய் உன் இஷ்டப்படி கல்யாணம நடந்த பிறகு ஓடிவந்து விடுவதென்றால் இது நியாயமா? பசும்புல் தரையென்று நினைச்சு, படுகுழியிலே விழுந்த யானை எப்படியாவது தப்பிக்க மாட்டோமான்னுதானே தவிக் குது ! அது மாதிரிதான் என் கதையும் ! மைனா! உன் கழுத்திலே கிடக்கிற மாங்கல்யத்துக்காவது மதிப்பு கொடுத்துப் பேசு நான் மானம் அவமானத்தை விட்டுட்டு உனக்கிட்ட பிச்சை கேட்க வந்திருக்கிறேன். பீதாம்பர மென்றால் ஊரெல்லாம் பேரு - புகழ் ! அதை அதை கெடுத்து விடாதே! பீதாம்பரம் பெண்சாதி, யாருடனோ ஓடிவிட்டாள் என்று ஊர் ஜனங்கள் பேசினால் அதைவிட நான் தூக்கு. மாட்டிக் கொண்டு செத்துப் போகலாம்!” 65 மன்னிச்சுக்கிங்க! என்னை மறந்துடுங்க! முடியவே முடியாது! உன்னை என்னால் மறக்கவே முடியாது! பாலைவனமாக இருந்த என்னுடைய நாடக வாழ்க் கையை நினைத்து நினைத்து அழுது புலம்பியிருக்கேன் ஆனால் அது எல்லாம் மறந்து போகிற அளவுக்கு உனக்கும் எனக்கும் கல்யாணம் நடந்தது. மைனா! திருமணத்தன்று நீ மகிழ்ச்சி' யாகத்தான் இருந்திருப்பாய். ஏனென்றால் அப்போதெல்லாம் நீ என்னை மன்மதன் என்றல்லவா நினைத்துக்கொண்டிருக்கிறாய்! உன் மகிழ்ச்சியெல்லாம் அப்போது நான் கொண்ட மகிழ்ச்சி யோடு போட்டி போட்டிருக்கவே முடியாது! எட்டாத பழம் நொண்டிக்குக் கிடைத்துவிட்ட து என்று பெருமைப்பட்டுக் கொண்டேன். எப்படியும் விஷயம் வெளிச்சமாகி விடும்- பிறகு. நீயும் என்ன இருந்தாலும் நம் கணவர் தானேயென்று சமா தான மாகி விடுவாய் என்று ஒரு நம்பிக்கை யிருந்தது எனக்கு. அந்த நம்பிக்கையிலும் ஆனந்தத்திலும் மண்ணைப் போட்டு விட்டாய் இப்போது ! "

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுருளிமலை.pdf/46&oldid=1694930" இலிருந்து மீள்விக்கப்பட்டது