பக்கம்:சுருளிமலை.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுருளிமலை

45 நல்ல "என்னைக் குற்றவாளியாக்கி நீங்கள் தப்பித்துக்கொள்ளப் பாக்கிறீங்களா? நீங்களும் முன்னொரு காலத்திலே வாலிபரா இருந்திருப்பீங்களே ; அதை நினைச்சுப்பாருங்க! வெட்கத்தை விட்டுவிட்டுக் கேக்கிறேன்-அதைப் போல இள வயசுக்கார ஒரு பெண்ணுக்கு என்னென்ன தோணும்! அதுக்கெல்லாம் நீங்க தகுதியானவர்தானா ? யோசித்துச் சொல்லுங்க !” எண்ணங்கள் யோசிப்பதென்ன? குருடனுக்கிட்ட கேட்டாலும் நான் தகுதியல்ல என்றுதான் சொல்லுவான், மைனா ! தகுதி- தரம்-இதெல்லாம்பற்றிப் பேசி உன்னை இணங்க வைக்க வரவில்லை நான் ! என்னை நீயேவந்து கல்யாணம் செய்து கொண்டாய். நீயே இப்போது கைவிட்டுவிட்டாய் ! இது நியாயமா - என்றுதான் உன்னிடம் மன்றாடிக் கேட்டு மீண்டும் உன்னை அழைத்துப் போக வந்திருக்கிறேன் ! 66 எனக்கும் உங்களுக்கும் கல்யாணம் என்று ஒரு நிகழ்ச் சியே நடக்கலேன்னு நினைச்சுக்கிட்டு இருந்துடுங்க் !” 'மருந்து சாப்பிடும்போது குரங்கை நினைத்துக் கொள் ளாதேயென்று யாரோ ஒரு மருத்துவன் சொன்னானாம ; அது, போல் தானிருக்கிறது இதுவும் !' .. 06 வீணாப் பேசிகிட்டு இருக்கிறதிலே என்ன பிரயோஜனம்?' அதான் நானும் சொல்றேன் ; உடனே என்னோடு. புறப்படு!" .. முடியாது! முடியாது! என் உயிர் போனாலும் சரி ; உங்களோட இனி வாழ முடியாது!" 06 வாழ் வேண்டாம்! சும்மா என் வீட்டிலே வந்து இரு. ஊர் வாயையாவது மூடுவதற்கு உதவியாக இருக்கட்டும் 99 இதுவரைக்கும் ஊர்வாய், அடங்கியா இருக்கும் ? இந் நேரம் என்னைப்பத்தி எவ்வளவோ பேசியிருப்பாங்க. இனி மேல்தானா பேசப் போறாங்க !'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுருளிமலை.pdf/47&oldid=1694931" இலிருந்து மீள்விக்கப்பட்டது